Ajithkumar: குட் பேட் அக்லி படத்தில் அஜித் சம்பளம்.. டீசர் அப்டேட்டை தெரிஞ்சிக்கலாமா!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும் படத்தின் வசூல் கடந்த இரு தினங்களில் 35 கோடிகளை நெருங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது குட் பேட் அக்லி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

வரும் ஏப்ரல் 10ம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி படம் ரிலீசாகவுள்ள நிலையில் அந்த படத்தின் மீது அடுத்ததாக ரசிகர்களின் கவனம் குவிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை ஒட்டி ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் 270 கோடி ரூபாய் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ajithkumar good bad ugly movie tamil cinema

நடிகர் அஜித்குமார்: இரண்டு ஆண்டுகள் ரசிகர்களின் காத்திருப்பதற்குப் பிறகு கடந்த 6ம் தேதி திரையரங்குகளில் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் ரிலீசாகியுள்ளது. துணிவு என்ற மிகச் சிறப்பான படத்தை கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கொடுத்திருந்தார் அஜித்குமார். இந்த படத்தை தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டு மிகப்பெரிய தாமதத்திற்கு உள்ளானது. இருந்த போதிலும் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

விடாமுயற்சி வசூல்: ஆயினும் கடந்த இரு தினங்களில் படத்தின் வசூல் 35 கோடிகளை நெருங்கியுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி ஃபீவர் சற்று ஓய்ந்துள்ளது. அடுத்ததாக வரும் ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள குட் பேட் அக்லி படத்தின் மீது ரசிகர்களின் முழு கவனமும் சென்றுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. டப்பிங் பணிகளையும் நிறைவு செய்து விட்டே துபாயில் நடைபெற்று வரும் கார் ரேசிங்கில் கலந்து கொள்ள அஜித் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ajithkumar good bad ugly movie tamil cinema

குட் பேட் அக்லி படத்தில் அஜித் சம்பளம்: குட் பேட் அக்லி படத்தை 270 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்குமாருக்கு 163 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரு மாதங்கள் உள்ள நிலையில், அடுத்தடுத்து ப்ரோமோஷன்களை துவக்கப் படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தையொட்டி படத்தின் டீசர் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி டீசர் அப்டேட்: இதையொட்டி ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் தெரிவித்து வருகின்றனர். படத்தின் அதிகபட்சமான ஷூட்டிங் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தில் 3 வித்தியாசமான கெட்டப்புகளில் அஜித் காணப்படுகிறார். பெரும்பாலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் நடித்து வரும் நிலையில் விடாமுயற்சி படத்தில் அவரது இளம் வயது கெட்டப் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. இந்நிலையில் அது போன்றதொரு கெட்டப் குட் பேட் அக்லி உள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலேயே தொடர்ந்து உறுதியாக நடித்துவந்த அஜித்குமார், அடுத்தடுத்து இளம் வயது கெட்டப்பில் ரசிகர்களுக்கு காட்சி கொடுத்து வருவது சிறப்பான மாற்றமாக பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X