Ajith: பொங்கல் ரேஸில் அஜித்தின் விடாமுயற்சி.. விரைவில் சூப்பர் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள விடாமுயற்சி படம் வரும் பொங்களையொட்டி ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரை வெளியிட்ட லைகா நிறுவனம் படத்தின் ரிலீஸ் குறித்தும் அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அனிருத் இசையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசிற்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தின் டீசரில் மாஸ் காட்டியுள்ள அனிருத் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களிலும் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் அசர்பைஜானில் ஏற்பட்ட காலச்சூழல் உள்ளிட்ட காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் தாமதமானது. இந்நிலையில் தற்போது ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 10 நாட்கள் பாங்காக்கில் இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி பட டீசர்: படம் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக டீசரை வெளியிட்டு லைகா நிறுவனம் அறிவித்திருந்தது. இதனால் குட் பேட் அக்லி அல்லது விடா முயற்சி இந்த இரண்டு படங்களில் எந்த படம் முதலில் ரிலீசாகும் என்று குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு விடாமுயற்சி தான் பொங்கல் ரிலீசாக முதலில் வெளியாக உள்ளதாகவும் இதையடுத்து கோடை கொண்டாட்டமாக குட் பேட் அக்லி படம் ரிலீசாகவுள்ளதாகவும் தெளிவு கிடைத்துள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் விரைவில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோட் திரில்லர் படம்: இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் சூழலில் படத்தின் பாடல்கள் மற்றும் பிஜிஎம் என அனைத்துமே கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியான படத்தின் டீசரில் அனிருத் மாஸ் காட்டியிருந்தார். இந்த டீசரின் இறுதியில் வரும் பிஜிஎம்மை அவர் தனியாக இசையமைத்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இந்நிலையில் ரோட் திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களை மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், தன்னுடைய இசை மற்றும் பாடல்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அஜித்திற்கும் அவர் சிறப்பான இசை மற்றும் பாடல்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், லவ் ட்ராக் அல்லது ஆங்கில தீமில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பர்ஸ்ட் சிங்கிள் மாஸாக அமையும் என்றும் படக்குழுவினர் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











