Ajith kumar: இயக்குநர் இல்லாமல் நடந்த விடாமுயற்சி சாங் ஷூட்டிங்?.. அஜித் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தில் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் அதிகமான ஷூட்டிங் அசர்பைஜானில் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தாய்லாந்தில் நடத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் அஜித் மற்றும் திரிஷா காம்பினேஷனில் பாடல் காட்சி காட்சியின் சூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சூட்டிங்கின் புகைப்படங்களை திரிஷா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் வரும் ஜனவரி மாதம் பொங்கலையொட்டி திட்டமிடப்பட்டுள்ளது. லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகிவரும் இந்த படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் இந்த படம் உருவாகி வரும் நிலையில் ரோடு திரில்லர் கதைகளத்தில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தற்போது தாய்லாந்தில் இந்த படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங்கில் அஜித் மற்றும் திரிஷாவின் காம்பினேஷனில் பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
சாங் சூட்டிங் ஓவர்: அஜித்தின் ஃபேவரிட்டான கல்யாண் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். முன்னதாக மாண்டேஜ் ஸ்டைலில் இந்த பாடல் உருவாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது கல்யாண் மாஸ்டர் இந்த பாடலை உருவாக்கியுள்ளார். பெரும்பாலும் பாடல் காட்சிகளில் இயக்குநருக்கு வேலை அதிகம் இருக்காது என்பதால் இந்தப் பாடலின் ஒட்டுமொத்த காட்சிகளையும் கல்யாண் மாஸ்டரே இயக்கிவிட்டதாக கூறப்பட்டுள்ளது. மாறாக இயக்குநர் மகிழ் திருமேனி படத்தின் போஸ்ட் புரொடக்ஷனை மேற்கொள்ளுமாறு அஜித் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் உத்தரவு: படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் அஜித் இவ்வாறு கூறியதாக தெரிகிறது. இதனிடையே பாடல் காட்சியின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

பொங்கல் ரிலீஸ்: இந்த படம் வரும் ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ள நிலையில் அடுத்ததாக கோடை கொண்டாட்டமாக அஜித்தின் குட் பேட் அக்லி படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.இந்தப்படத்தில் அஜித் மூன்று கெட்டப்புகளில் மாஸ் காட்டிவரும் நிலையில் படத்தின் போஸ்டர்களும் சிறப்பாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதனிடையே அஜித்தின் போர்ஷன்கள்நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் மகிழ் திருமேனி சமூக வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











