Ajithkumar: அடுத்தக்கட்டத்துக்கு தயாரான விடாமுயற்சி டீம்.. அட இதுல அஜித்தை காணோமே?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கை அஜித் நிறைவு செய்துள்ளார். இதையடுத்து தற்போது குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கிற்காக அவர் ஸ்பெயினில் உள்ளார்.

இந்த படத்தின் அடுத்தடுத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை படக்குழுவினர் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டை தயாரிப்பு தரப்பான லைகா நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. ஆனால் அஜித் ஸ்பெயினில் உள்ள நிலையில் லைகா வெளியிட்டுள்ள புகைப்படங்களில் அஜித் இடம் பெறவில்லை.

ajithkumar vidaamuyarchi movie aarav

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள நிலையில் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாகியுள்ளார் திரிஷா. வில்லனாக அர்ஜுன் நடித்துள்ள நிலையில் படத்தின் முக்கியமான கேரக்டரில் ஆரவ் நடித்துள்ளார்.

ajithkumar vidaamuyarchi movie aarav

விடாமுயற்சி படம்: விடாமுயற்சி படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் படத்தின் சூட்டிங் சில மாதங்கள் தள்ளி போனது. இதனால் இந்த ஆண்டிலேயே ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்து லைகா நிறுவனம் அப்டேட் தெரிவித்துள்ளது.

ajithkumar vidaamuyarchi movie aarav

விடாமுயற்சி படத்தின் டப்பிங்: படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் வேலைகளை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். இதற்காக பூஜை போடப்பட்டு டப்பிங் வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் முதல் நபராக தன்னுடைய டப்பிங் வேலையை நடிகர் ஆரவ் துவங்கியுள்ளார். இதன் புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் அஜித் மிஸ்ஸிங். தற்போது ஸ்பெயினில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிற்காக உள்ள நடிகர் அஜித்குமார், விரைவில் அந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு சென்னை வருவார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விடாமுயற்சி படத்தின் டப்பிங்கில் இணைய உள்ளதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ajithkumar vidaamuyarchi movie aarav

ரசிகர்களின் வெயிட்டிங்: கடந்த ஆண்டு ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது இரு ஆண்டுகளாக அவரது அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது. இந்நிலையில் அவரது அடுத்தடுத்த படங்களில் சில மாத இடைவெளியிலேயே ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய உற்சாகத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X