Shalini Ajith: குடும்பத்துடன் ஓபன்ஹெய்மர் படம் பார்க்க வந்த ஷாலினி.. அஜித் வந்தாரா?

சென்னை: நடிகர் அஜித்தின் நடிப்பில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தமாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்திற்காக தற்போது தன்னுடைய உடலை ஒல்லியாக்கி ஸ்மார்ட்டாகியுள்ளார் அஜித். அவரின் ரீசண்ட் கிளிக்ஸ் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

விடாமுயற்சி படத்தின் சூட்டிங் எப்போது தான் துவங்கும் என்று ரசிகர்கள் வெறுப்பிற்கு உள்ளாகியுள்ளனர். விரைவில் அவர்களுக்கு இனிப்பான செய்தி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Actor Ajiths family watched Openheimer movie in Theatre

குழந்தைகளுடன் ஓபன்ஹெய்மர் படம் பார்த்த ஷாலினி அஜித்: நடிகர் அஜித்குமாரின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகி ரசிகர்களை குஷியாக்கியது. நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் வாரிசு படத்துடன் துணிவு படம் மோதியது. இரு படங்களும் ரசிகர்களின் ஆதரவை பெற்ற நிலையில், அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடினர். வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து உடனடியாக அஜித்தின் அடுத்தப்படம் துவங்கவிருந்த நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த அந்தப் படம் கைவிடப்பட்டது. மாறாக அஜித்தின் இந்தப் படத்தை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது. படத்தின் சூட்டிங் ஏப்ரல், மே மாதங்களில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து சூட்டிங் தள்ளிப் போயுள்ளது.

இந்நிலையில் இதோ, அதோ என்று ஜூலை மாதமும் நிறைவடையவுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்காக அஜித் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டாகியுள்ளார். ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. சினிமா, பேஷன் என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டாலும் தன்னுடைய குடும்பத்திற்காக அதிக நேரம் ஒதுக்குவார் அஜித்.

Actor Ajiths family watched Openheimer movie in Theatre

அந்த வகையில், தற்போது அவர் குடும்பத்துடன் Openheimer படத்தை திரையரங்கில் சென்று பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையொட்டி ஷாலினி தன்னுடைய மகன் ஆத்விக் மற்றும் மகள் அனோஷ்காவுடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அஜித் இல்லாத நிலையில், அவர் இல்லாமல்தான் ஷாலினி மற்றும் மகன், மகள் படம் பார்க்க வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அஜித் நடிப்பை ஒருபுறம் முழுமூச்சுடன் மேற்கொண்டு வந்தாலும் மறுபுறம் தன்னுடைய பைக் பயணங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களில் அவரை இதுபோன்ற பைக் பயணங்களில் பார்க்க முடிந்தது. தொடர்ந்து ரசிகர்களுடன் இணைந்து புகைப்படங்கள் எடுப்பதையும் அஜித் வாடிக்கையாக வைத்துள்ளார். இதனிடையே, விரைவில் அவரது விடாமுயற்சி சூட்டிங் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X