Ajith: குட் பேட் அக்லியில் மல்ட்டிபிள் கெட்டப்புகளில் நடிக்கும் அஜித்.. ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் முதல் கட்ட சூட்டின் துவங்க உள்ளதாகவும் இதையொட்டி பிரீ புரொக்ஷன்ஸ் பணிகளில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் பிரபல தெலுங்குப்பட நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப் போவதால், குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் மே மாதத்திலேயே துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐதராபாத்தில் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை நிறைவு செய்து விட்டே விடாமுயற்சி சூட்டிங்கிற்காக அசர்வேஜானுக்கு அஜித் பயணமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Ajith s Good bad ugly movie heroine update seems to release soon

விடாமுயற்சி படம்: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்தப்படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு இறுதியிலேயே அசர்பைஜானில் துவங்கிய சூழலில் பல்வேறு காரணங்களால் படத்தின் ஷூட்டிங் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. படத்தின் ஷூட்டிங் 70 சதவிகிதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளதாகவும் மீண்டும் அசர்பைஜானிலேயே படத்தில் ஷூட்டிங் துவங்க உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஷூட்டிங் எப்போது துவங்கும் என்பதில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. இந்த சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பில் அஜித் இணையுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது.

குட் பேட் அக்லி பட சூட்டிங்: ஜூன் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வரும் மே மாதத்திலேயே ஐதராபாத்தில் துவங்கவுள்ளதாகவும் படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு விடாமுயற்சி படத்தின் சூட்டில் அஜித் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டின் தள்ளிப் போவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி ரிலீசாகும் என்று முன்னதாக தகவல்கள் வெளியான சூழலில் இந்த ஆண்டு தீபாவளிக்காவது படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அஜித் ஜோடி யார்?: குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் பிரபல தெலுங்குப்பட நடிகை ஸ்ரீலீலா முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் அஜித்திற்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மாறாக படத்தில் மற்றொரு முன்னணி நடிகர் இணைய உள்ளதாகவும் அவருக்கு ஜோடியாகவே ஸ்ரீலீலா இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் அல்லது மீனா இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இருவருமே முன்னதாக அஜித்துடன் ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சூழலில் தற்போது இவர்களில் ஒருவர் குட் பேட் அக்லி படத்தில் ஜோடியாக இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Actor Ajith s Good bad ugly movie heroine update seems to release soon

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த தகவல் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் அஜித் பல்வேறு கெட்டப்புகளில் தோன்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த படத்தின் கதைக்களம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது குறித்தும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். தன்னுடைய வயதிற்கு ஒத்த நடிகைகளுடன் தொடர்ந்து நடிகர் அஜித் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக அவர் யாருடன் ஜோடி சேர்வார் என்பது குறித்து அறிந்துக் கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X