Ajith: இரண்டே நாட்களில் நிறைவடைந்த அஜித் படத்தின் ஐதராபாத் சூட்டிங்.. அட இதுதான் காரணமா!
ஐதராபாத்: நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் கடந்த 9ம் தேதி ஹைதராபாத்தின் சாரதி ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளது. எளிமையான பூஜையுடன் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி தொடர்ந்து 9 மற்றும் 10 தேதிகளில் அங்கு ஷூட்டிங் நடைபெற்றதாகவும் இதை அடுத்து ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு படக் குழுவினர் சென்னை திரும்பியுள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பிரபல தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலா நாயகியாக இணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அஜித்திற்கு ஜோடியாக சிம்ரன் அல்லது மீனா படத்தில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகவும் பிரம்மாண்டமாக துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி படத்தின் பூஜை மற்றும் ஷூட்டிங் மிகவும் எளிமையாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் பூஜை புகைப்படங்கள்கூட வெளியிடப்படாமல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் கடந்த 9ம் தேதி சாரதி ஸ்டூடியோவில் துவங்கியுள்ளது. எளிமையான பூஜையுடன் இந்த படத்தின் சூட்டிங்கை துவக்கியுள்ளார் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். முதல்கட்டமாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் திட்டமிடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஆக்ஷன் காட்சிகளுக்காக நடிகர் அஜித் ரிகர்சல் எடுத்ததாகவும் படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனால் ஆக்சன் காட்சிகளை சூட்டிங் செய்வது படக்குழுவினருக்கு எளிமையாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படம்: இந்நிலையில் 9ம் தேதி துவங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் நேற்றைய தினம் தொடர்ந்து நடத்தப்பட்டது. ஹைதராபாத்தில் சாரதி ஸ்டுடியோவில் இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. அஜித்திற்கு ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோதான் எப்போதுமே ஃபேவரைட். அங்கு தான் அவரது படங்களின் சூட்டிங் பெரும்பாலும் அதிகமாக எடுக்கப்படும். இந்நிலையில் தற்போது வித்தியாசத்தை காண்பிப்பதற்காக ஆதிக் ரவிச்சந்திரன் சாரதி ஸ்டுடியோவில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கினை துவங்கியுள்ளார். இந்நிலையில் இரு தினங்கள் மட்டுமே சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு படக்குழுவினர் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ளனர்.
2 நாட்களில் நிறைவடைந்த அஜித் பட சூட்டிங்: ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் தேர்தல் நேரத்தில் படத்தின் சூட்டிங்கை எடுக்க வேண்டாம் என்று திட்டமிட்டு படக்குழுவினர் தற்போது சென்னை திரும்பியுள்ளனர். தொடர்ந்து தேர்தல் நிறைவடைந்தவுடன் மீண்டும் சாரதி ஸ்டுடியோவில் அடுத்த கட்ட சூட்டிங் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலும் இளமையான லுக்கிலும் மற்றும் அதிகமான முடியை வளர்த்து குடுமி போட்டபடி ஒரு லுக்கிலும் அவர் தன்னுடைய கேரக்டர்களில் வித்தியாசம் காட்டவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அஜித் ஹீரோயின்?: படத்தில் பிரபல தெலுங்குப்பட நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ள சூழலில் அவர் அஜித்திற்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இருவரில் ஒருவர் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் முன்னதாக அஜித்துடன் இணைந்து நடித்துள்ள சூழலில் தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து படக்குழுவினர் விரைவில் அப்டேட் வெளியிடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மிகப்பெரிய ஹைப்புடன் இந்த படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் மிகவும் எளிமையாக படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கியுள்ளது.
விடாமுயற்சி பட சூட்டிங்: இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூலை நிறைவு செய்துவிட்டு அவர் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் உள்ளிட்டவை இன்னும் எடுக்கப்பட வேண்டிய சூழலில் அந்த சூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா மற்றும் அர்ஜுன் இருவரும் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக திரிஷா மற்றும் அர்ஜுன் இந்த படத்திற்காக ஒதுக்கிய கால்ஷீட்டில் அந்த படத்தின் ஷூட்டிங் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் படம் இழுபறியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











