Actor Ajith: இன்று துவங்கும் குட் பேட் அக்லி பட மாஸ் இன்ட்ரோ சாங் சூட்டிங்.. அட இதுல இவ்ளோ இருக்கா!
ஐதராபாத்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அஜித் மிகவும் ஸ்லிம்மாகி ஸ்மார்ட்டான லுக்கில் காணப்படுகிறார். படத்தில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ஷேடில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முன்னதாக வெளியாகி ஏராளமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் சூழலில் அஜித்தை வித்தியாசமாக காட்ட அவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹைதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் இன்றைய தினம் அஜித்தின் இன்ட்ரோ சாங்கிற்கான ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் நடிப்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் துணிவு படம் வெளியான சூழலில் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் அவரது அடுத்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போன சூழலில் படம் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக முன்னதாக கூறப்பட்டது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அஜித்.
குட் பேட் அக்லி பட சூட்டிங்: இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து ஹைதராபாத்தில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் துவங்கியுள்ளது. படத்தில் அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடலின் சூட்டிங் ஹைதராபாத்தின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் மாஸாக ஏராளமான டான்ஸர்களுடன் இந்த பாடலின் சூட்டிங் எடுக்கப்பட்டு வருவதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் 150க்கும் அதிகமான நடன கலைஞர்கள் இணைந்து அஜித்துடன் ஆட்டம் போட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துவரும் சூழலில் இந்தப் பாடல் முன்னதாக வெளியான அஜித்தின் இன்ட்ரோ பாடல்களைப் போல அதிகமான கவனத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்
ஐதராபாத் சூட்டிங்: இந்த படத்தை அஜித்தின் ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் மிகவும் ஈடுபாட்டுடன் எடுத்து வருகிறார். இந்நிலையில் அஜித் கேரியரில் இந்த படமும் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் வரும் 7ம் தேதிக்குள் ஐதராபாத் சூட்டிங் நிறைவடையவுள்ளதாகவும் இதையடுத்து அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஜப்பான் பயணமாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கையும் அஜித் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.
பொங்கல் ரிலீஸ்?: விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரு படங்களும் ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளியாகும் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே காணப்படுகிறது. இதனிடையே விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அடுத்ததாக இணையவுள்ள அஜித், தொடர்ந்து மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications











