Ajith: குட் பேட் அக்லி படத்தில் ஹெலிகாப்டர் ஃபைட்டா.. பறக்கும் அஜித்.. சூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் இதோ!

சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் முன்னதாக சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயினில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ajithkumar vidaamuyarchi movie good bad ugly movie

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஜனவரியில் அவரது துணிவு படம் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் குவித்தது. இந்தப் படத்தை தொடர்ந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் அடுத்தப்படத்திற்காக காத்திருக்கின்றனர். இடையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் பல்வேறு காரணங்களால் தடைபட்ட நிலையில், படத்தின் சூட்டிங் தாமதமானது, இதையடுத்து படத்தின் ரிலீசும் தாமதமாகி வருகிறது. படம் அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் சூட்டிங்: விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்துள்ள அஜித், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்குகள் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அடுத்த ஷெட்யூலுக்காக அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஸ்பெயினில் உள்ளனர். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அஜித்தின் படங்கள் ரிலீசாகாமல் உள்ள நிலையில், இந்தப் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள்தான் அவர்களுக்கு ஆறுதல்.

ajithkumar vidaamuyarchi movie good bad ugly movie

சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்: தற்போது ஸ்பெயினில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வரும் நிலையில், அஜித்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி மாஸ் காட்டி வருகின்றன. அஜித்துடன் அவரது குடும்பத்தினரும் ஸ்பெயின் சென்றுள்ள நிலையில், அடுத்தடுத்து அஜித்துடனும் தன்னுடைய மகள் அனொஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடனும் புகைப்படங்களை ஷாலினி அஜித் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரப்பி வருகிறார். இதனிடையே குட் பேட் அக்லி சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அடுத்தடுத்த புகைப்படங்களை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் அஜித்தின் லுக் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஹெலிகாப்டர் ஃபைட்?: இந்தப் புகைப்படங்களில் ஹெலிகாப்டரில் அஜித் இருக்கும்படியாகவும் மற்றொரு ஹெலிகாப்டர் அவரை துரத்துவதாகவும் அமைந்துள்ளது. இதையொட்டி படத்தில் ஹெலிகாப்டர் ஃபைட் உள்ளதாக தெரிகிறது. மற்றொரு புகைப்படத்தில் நடிகர் அஜித் அமைதியாக ஸ்கிரிப்டை படிப்பதாக காணப்படுகிறது. அடுத்தடுத்த இந்த புகைப்படங்களில் கூலர்சுடன் அஜித் மாஸ் காட்டியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் அவரது படங்கள் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X