Actor Ajith: ஸ்பெயினுக்கு பறக்கவிருக்கும் குட் பேட் அக்லி டீம்.. அப்ப ஜப்பான் இல்லையா?

சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங்கில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார். கடந்த மே மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்இல் இணைந்திருந்த அஜித், ஐதராபாத்தில் முதல் கட்ட சூட்டிங்கை கடந்த மாதத்தில் நிறைவு செய்தார். இதையடுத்து கடந்த 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டியங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணையவுள்ளார் அஜித். அடுத்த மாதத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதத்தில் படக்குழுவினர் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Ajithkumar Good bad ugly movie Adhik Ravichandran Vidaamuyarchi movie Spain

நடிகர் அஜித்: நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடா முயற்சி என இரண்டு படங்களில் அடுத்தடுத்து கவனம் செலுத்தி வருகிறார். இந்த படங்களின் ஷூட்டிங்கில் அவர் மாறி மாறி பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டிலேயே விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் இடையில் ஆறு மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் தடைப்பட்டது. நிதி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இந்த ஷூட்டிங் தடைக்கு காரணங்களாக கூறப்பட்டன. இதனிடையே கடந்த மே மாதத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைந்திருந்தார்.

குட் பேட் அக்லி படம்: படத்தின் முதல் கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் துவங்கி சில தினங்கள் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த அஜித் கடந்த மாதம் 24ம் தேதி முதல் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். அங்கு தொடர்ந்து அடுத்தடுத்த காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இடையில் சில தினங்கள் தன்னுடைய மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினி அஜித்தின் உடல்நல பாதிப்பிற்காக சென்னை வந்திருந்தார் அஜித். அவருக்கு சிறிய அளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளார் அஜித்.

ஸ்பெயின் செல்லும் அஜித்: அவரது காட்சிகள் இன்று முதல் அசர்பைஜானில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது லுக் இரண்டு போஸ்டர்களாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அஜித் இணையவுள்ளார். இதன் இரண்டாவது கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் படக்குழுவினர் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக ஸ்பெயின் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஜப்பானுக்கு பதில் ஸ்பெயின்: முன்னதாக இந்த படத்தின் வெளிநாட்டு சூட்டிங் ஜப்பானில் திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் அதிகமான காட்சிகள் அங்கு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அங்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் ஷூட்டிங்கில் பாதிப்பு ஏற்படும் என்று யோசித்த படக்குழுவினர் தங்களுடைய சூட்டிங் ஸ்பாட்டை ஸ்பெயினிற்கு மாற்றியுள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைந்து அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X