Actor Ajith: துவங்கியது விடாமுயற்சி பட சூட்டிங்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா!
சென்னை: நடிகர் அஜித் தற்போது குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி படங்களின் சூட்டிங்கில் அடுத்தடுத்து இணைந்து நடித்து வருகிறார். கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் ஷெட்யூலை ஐதராபாத்தில் நிறைவு செய்த அஜித், தற்போது அசர்பைஜானில் துவங்கியுள்ள விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.
விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து ஒரு மாத காலம் அசர்பைஜானில் நடத்தப்பட உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித், அசர்பைஜான் புறப்பட்டு சென்றதை பார்க்க முடிந்தது. இதனிடையே, படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருவதாக அஜித்தின் மேனேஜர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி என அடுத்தடுத்த இரு படங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு அசர்பைஜானில் துவங்கப்பட்டு சில மாதங்கள் விறுவிறுப்பாக நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்பட்ட நிலையில் நேற்றைய தினம் இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த சூட்டிங்கில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். அடுத்த வாரத்தில் நடிகர் அர்ஜுன் மற்றும் திரிஷாவும் விடாமுயற்சி பட சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடாமுயற்சி பட சூட்டிங்: தொடர்ந்து இந்த படத்தின் சூட்டிங் ஒரு மாத காலம் அசர்பைஜானில் நடத்தப்பட உள்ளதாகவும் இதையடுத்து ஐதராபாத்தில் 10 நாட்கள் சூட்டிங் எடுக்கப்பட்டு அத்துடன் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வருவதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அஜித்குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என இந்த படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றன. படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது. முன்னதாக தடம் உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ஒரு மாதம் நடக்கும் சூட்டிங்: இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைய இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் தொடர்ந்து அஜீத் அசர்பைஜானில் இருந்தபடி இந்த படத்தில் நடித்து முடித்துக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் சில தினங்கள் அவர் தன்னுடைய சொந்த வேலைகளுக்காக சென்னை வர உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங்கை ஜூலை மாதத்தில் நிறைவு செய்துவிட்டு தொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
தீபாவளி ரிலீசுக்கு திட்டம்: விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக குட் பேட் அக்லி படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அஜித்தின் துணிவு படம் ரிலீசாகி ஒன்றரை ஆண்டுகள் கழிந்தும் அவரது அடுத்தப்படம் ரிலீஸ் குறித்த எந்த அப்டேட்டும் இல்லாத நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த இயக்குநர்களிடம் அஜித் கதை கேட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











