Suresh Chandra: இன்று மாலை புதிய அப்டேட்.. விடாமுயற்சி அறிவிப்பா.. சுரேஷ் சந்திரா ட்வீட்!
சென்னை: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அசர்பைஜானில் முகாமிட்டுள்ளார். கடந்த மாதம் 24ம் தேதி முதல் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக இந்த படத்தின் சூட்டிங் முடங்கிய நிலையில் தற்போது இந்த படம் தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையொட்டி படத்தின் சூட்டிங் வேகம் எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 05 மணியளவில் இந்த படத்தின் சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட உள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் தள பக்கங்களில் அறிவித்துள்ளது.

நடிகர் அஜித்: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் இணைந்து நடித்து வருகிறார். கடந்த மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை ஹைதராபாத்தில் முடித்துக் கொடுத்த அஜித், கடந்த மாதம் 24ம் தேதி முதல் அசர்பைஜானில் துவங்கிய விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணைந்து தொடர்ந்து நடித்து வருகிறார். இடையில் சில தினங்கள் ஷாலினி அஜித்தின் அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்து சென்ற அஜித் மீண்டும் விறுவிறுப்பாக நடந்துவரும் விடாமுயற்சி சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விடாமுயற்சி சூட்டிங்: தொடர்ந்து ஹைதராபாத்தில் சில விடாமுயற்சி படத்தின் சில பேட்ச் வேலைகள் நடக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து படம் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படம் தீபாவளியையொட்டி வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் இதில் சில மாற்றங்கள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனிடையே விடாமுயற்சி சூட்டிங் துவங்கிய மூன்று வாரங்களிலேயே அடுத்தடுத்து மூன்று போஸ்டர்களை பட குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.
5 மணிக்கு புதிய அறிவிப்பு: இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணியளவில் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளதாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மற்றும் விடாமுயற்சி படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இருவருமே தங்களது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளனர். விடாமுயற்சி படத்தின் பெயரை குறிப்பிடாமல் இந்த அறிவிப்பை அவர்கள் மேற்கொண்டுள்ளனர். விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் குறித்து அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் காத்திருப்பு: இதனால் அஜித்தின் ரசிகர்கள் பிங்கர் கிராசிங் மூவ்மெண்டில் தற்போது உள்ளனர். விடாமுயற்சி படம் தீபாவளியை ஒட்டி வெளியாகும் பட்சத்தில் இது தல தீபாவளியாக இருக்கும் என்று முன்னதாக அவர்கள் அனைவரும் உற்சாகம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இதில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்பட்ட தகவல் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் இன்று மாலை படத்தின் ரிலீஸ் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











