Ajithkumar: வந்தது விடாமுயற்சிக்கு விடிவுகாலம்.. இறுதிக்கட்ட சூட்டிங்கை திட்டமிடும் மகிழ் திருமேனி!
சென்னை: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் துவங்கப்பட்டு தொடர்ந்து இரு தினங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து அங்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலையடுத்து ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இந்நிலையில் மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு வரும் ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து ஹைதராபாத்திலேயே நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த படத்தின் முதல் கட்ட ஷூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இணையுள்ளதாகவும் தொடர்ந்து அந்த படத்தின் ஷூட்டிங்கை ஒட்டுமொத்தமாக நிறைவு செய்துவிட்டு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்றும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் கடந்த வாரத்தில் துவங்கப்பட்டு தொடர்ந்து ஹைதராபாத்தில் இரு தினங்கள் நடத்தப்பட்டன. அவரது நடிப்பில் ஆக்சன் காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட்ட சூழலில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தொடர்ந்து ஜூன் 7ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலில் ஆக்சன் காட்சிகள், பாடல் காட்சிகள் உள்ளிட்டவை திட்டமிடப்பட்டுள்ளன. இந்த படத்தில் அஜித்துடன் பிரபல தெலுங்குப் பட ஹீரோயின் ஸ்ரீலீலா இணைய உள்ளார்.
குட் பேட் அக்லி பட சூட்டிங்: ஆனால் ஸ்ரீலீலா அஜித்திற்கு ஜோடியாக இல்லாமல் படத்தில் நடிக்கவுள்ள மற்றொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து படக்குழு விரைவில் அப்டேட் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் ஷெட்யூலை தொடர்ந்து நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் படத்தின் ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் குட் பேட் அக்லி பட சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தாமதமாகும் விடாமுயற்சி சூட்டிங்: இந்நிலையில் இந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு அவர் தன்னுடைய விருப்பமான பைக் டூரையும் மேற்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே மே மாதத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டின் இறுதியில்தான் அசர்பைஜானில் துவங்கப்பட்டது. தொடர்ந்து படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்த சூழலில் அங்கு நிலவிய காலச்சூழல் மற்றும் தயாரிப்பு தரப்பின் நிதி நெருக்கடி காரணமாக படத்தின் சூட்டிங்கை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மாற்றமடைந்த அஜித்தின் பிளான்: இந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு ஜூன் மாதத்தில்தான் ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் அஜித் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தாமதத்தையடுத்து மே மாதத்திலேயே குட் பேட் அக்லி படத்தில் அஜித் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் இதில் இளமையான லுக்கிலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய உடல் எடையை அவர் கணிசமாக குறைத்துள்ள சூழலில், அவருக்கு இந்த லுக் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











