Actor Ajith: விடாமுயற்சி.. குட் பேட் அக்லி.. அடுத்தடுத்த படங்கள்.. ஓ இதுதான் அஜித்தோட பிளானா?

சென்னை: நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிற்காக அஜர்பை ஜானில் முகாமிட்டுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் அஜர்பைஜான் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு படக்குழுவினர் ஹைதராபாத் செல்லவுள்ளனர்.

ஐதராபாத்தில் சில பேட்ச் வேலைகளை நிறைவு செய்துவிட்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் நிறைவு செய்ய விடாமுயற்சி டீம் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கு ஏற்ப குழுவினர் திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்

Ajith Good bad ugly movie Vidaamuyarchi movie Azerbaijan August

நடிகர் அஜித்: நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அசர்பைஜானில் உள்ளார். தற்போது படத்தின் அடுத்தடுத்த ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அஜித் -திரிஷா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில தினங்களில் அசர்பைஜான் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு பட குழுவினர் ஐதராபாத் செல்ல உள்ளனர். அங்கு சில தினங்கள் சூட்டிங் நடத்தப்படும் நிலையில் வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய குட் பேட் அக்லி படத்தில் அஜித் இணையவுள்ளார்.

தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடும் விடாமுயற்சி: வரும் தீபாவளிக்கு விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரோடக்ஷன்ஸ் வேலைகளையும் படக்குழுவினர் துரிதப்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிதது வருகின்றனர். படம் ரேஸி ஆக்ஷன் திரில்லர் ஜானரில் உருவாகி வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதேபோல ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் துவங்கவுள்ள குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கும் விரைவு படுத்தப்பட்டு படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த போஸ்டர்கள்: இந்த படத்தில் அஜித்திற்கு யார் ஜோடியாவார்கள் என்பது குறித்து படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில் இது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படத்தில் அஜித் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவுள்ள நிலையில் இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதே போல விடாமுயற்சியின் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதில் சேஸிங்கில் அஜித் காணப்படுகிறார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: கடந்த ஆண்டு ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் ரிலீசான நிலையில், அவரது அடுத்தப்படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளியில் அவரது விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக மகிழ் திருமேனியின் தடம் உள்ளிட்ட படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களான நிலையில், விடாமுயற்சி படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X