Ajith: அஜித் லேட்டஸ்ட் வீடியோ.. எங்க இவ்ளோ அவசரமாக போறாரு!

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியான துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் படத்தை தொடர்ந்து விடாமுயற்சி என்ற படத்தில் நடிகர் அஜித் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

அடுத்த மாதத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்காக தற்போது 10 கிலோ வரை அஜித் எடை குறைத்து ஸ்லிம்மாகியுள்ளார்.

Actor Ajiths Recent video in Airport makes fans more happy

விமானநிலையத்தில் அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ: நடிகர் அஜித்குமார் தன்னுடைய ஒரு படத்தில் வரும் டயலாக்கை போல அவரது வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் தானாக செதுக்கியுள்ளார். தானாகவே தன்னுடைய சொந்த முயற்சியில்தான் தன்னுடைய திரைப்பயணத்தை உருவாக்கி அதில் நடைபோட்டுள்ளார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது சொந்த வாழ்க்கையில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பல விஷயங்களை செய்துள்ளார் அஜித்.

கடந்த ஜனவரியில் இவரது துணிவு படம் ரிலீசானது. வங்கிக்கொள்ளையை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஜய்யின் வாரிசு படத்துடன் அஜித்தின் துணிவு படம் ஒரே நேரத்தில் ரிலீசான நிலையில், அஜித்தின் துணிவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அதிகமான வசூலையும் குவித்தது.

Actor Ajiths Recent video in Airport makes fans more happy

இந்நிலையில் அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்ட நிலையில், பல மாதங்களை கடந்தும் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்படாதது ரசிகர்களை வெகுவாக அப்செட் செய்துள்ளது. தீபாவளி ரிலீசாகவே இந்தப் படம் வெளியாகும் என்று முன்னதாக கூறப்பட்ட நிலையில், பொங்கல் ரிலீசாகவாவது வெளியாகுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப்படத்தின் சூட்டிங், இதோ, அதோ என்று பல மாதங்களை கடந்துள்ளது. இதனிடையே தற்போது அஜித் 10 கிலோ வரை எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அவரது இந்த கெட்டப் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனிடையே அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Actor Ajiths Recent video in Airport makes fans more happy

இதனிடையே, அஜித்தின் வீடியோக்கள், புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாவது மட்டுமே ரசிகர்களின் ஒரே ஆதரவாக உள்ளது. அந்தவகையில், அஜித்தின் விமான நிலைய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய லக்கேஜுடன் வேகமாக வரும் அஜித் இடையில் தன்னிடம் வணக்கம் வைப்பவர்களுக்கு பதிலுக்கு வணக்கம் தெரிவிப்பதாக காணப்படுகிறது. எப்போதுமே ரசிகர்களுடன் இணைந்து செல்ஃபிக்களை அஜித் அதிகமாக எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X