Ajith son Adhvik: புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா.. கால்பந்தாட்டத்தில் கெத்து காட்டும் அஜித் மகன்!
சென்னை: நடிகர் அஜித் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரியில் வெளியான துணிவு படம் மாஸ் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சிறப்பான கணவராக, நல்ல தந்தையாக அஜித்தை பார்க்க முடிகிறது.

நடிகை ஷாலினியை திருமணம் செய்துக் கொண்ட அஜித்திற்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
கால்பந்தாட்டத்தில் மெடல் வென்ற அஜித் மகன்: நடிகர் அஜித்குமார் கடந்த 30 ஆண்டுகளை தாண்டி திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடிகை ஸ்ரீதேவியுடன் இவர் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்துள்ளார். தனது அடுத்தடுத்தப் படங்களில் சமூக அக்கறை இருக்கும்படியாக பார்த்து வருகிறார் அஜித். அந்த வகையில் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு ஆகிய படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.
இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த இடத்திலிருந்து நடிகை த்ரிஷாவுடன் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து இந்த இடத்தில் 3 மாதங்கள் நடத்தி முடிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங்கை தொடர்வதில் தொடர்ந்து அடுத்தடுத்த சிக்கல்களை படக்குழுவினர் சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் பிரச்சினையால், அஜர்பைஜானில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, படத்தின் கலை இயக்குநர் மிலன் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், படத்தின் சூட்டிங்கை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து அஜர்பைஜான், துபாய் மற்றும் சென்னைனயில் திட்டமிடப்பட்டிருந்தது.
இதனிடையே தனது சொந்த வாழ்க்கையிலும் மிகச்சிறப்பான திட்டமிடலுடன் இருந்து வருகிறார் அஜித். நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அஜித்திற்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் ஆத்விக், கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஆர்வத்துடன் இருந்து வருகிறார். இவர் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

சென்னையின் FC Grassroot அகாடமியில் ஆத்விக் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்விக்கிற்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் மகன், சினிமாவிலேயே இயக்குநராக நுழைந்துள்ள நிலையில், ஆத்விக் விளையாட்டை தன்னுடைய கேரியராக தேர்ந்தெடுத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











