Advik Ajith: சேட்ட.. அம்மாவுடன் லவ் சிம்பல்.. குட்டி தலையின் ரீசண்ட் க்ளிக்!

சென்னை: நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து நடித்து வருகிறார். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியிலும் இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற படங்களில் நடித்துள்ளார். முன்னதாக இவரை தல என்று ரசிகர்கள் கொண்டாடிவந்த நிலையில், அந்த பட்டத்தின் மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதை உணர்ந்து கொண்ட அஜித், அந்த பட்டத்தை இனி உபயோகப்படுத்தக் கூடாது என்று ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதை தற்போது வரை அவர்கள் கடைபிடித்து வருகிறார்கள்.

தனக்கென்று ஒரு கொள்கையுடன் தமிழ் சினிமாவில் செயல்பட்டு வருபவர் அஜித். அவரது அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து ஹிட் கொடுத்து வருகின்றன. படங்கள் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும் அவருடைய ரசிகர்களின் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏகே63 படத்தில் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளது. இதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் ஈடுபட்டு வருகிறார்.

Actor Ajiths son Advik and his mother Shalini Ajith photo is trending

நடிகர் அஜித்: நடிகர் அஜித் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர். முன்னணி நடிகராக காணப்படும் அஜித் நடிப்பில் முதலில் காதல் படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றன. பின்னர் அமர்க்களம் உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றிக் கொண்டவர் அஜித். இவரை தல என்று ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் அந்த பட்டத்தால் பிரச்சனைகள் ஏற்படுவதை உணர்ந்து கொண்ட அஜித், அந்த பட்டத்தை இனி உபயோகப்படுத்தக் கூடாது என்று தன்னுடைய ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். அதை தற்போது வரை அவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

விடாமுயற்சி படம்: கடந்த ஆண்டில் துணிவு என்ற படம் அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இந்நிலையில் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் அடுத்தடுத்த இயக்குனர்களின் இயக்கத்திலும் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதில் ஏகே 63 படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சினிமாவில் தன்னை மிகச் சிறப்பாக நிலை நிறுத்தி வருகிறார் அஜித். நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித்திற்கு ஆத்விக் மற்றும் அனௌஷ்கா என இரு குழந்தைகள் உள்ளனர்.

ஆத்விக் அஜித்: இதில் ஆத்விக் சிறந்த கால்பந்தாட்ட வீரராக காணப்படுகிறார். சமீபத்தில் கால்பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற அவரதுபுகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அஜித் தன்னுடைய சூட்டிங் உள்ளிட்டவற்றில் பிஸியாக காணப்படுவதால் ஆத்விக்கின் கால்பந்தாட்ட திறமையை ஊக்குவிக்கும் வகையில் நடிகை ஷாலினி, அவருடைய பல போட்டிகளிலும் உடன் சென்று அவருக்கு கை கொடுத்து வருகிறார் அந்த வகையில் சமீபத்திய போட்டி ஒன்றில் ஆத்விக் பங்கேற்ற நிலையில் ஷாலினியுடன் ஆத்விக் இருக்கும்படியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அம்மாவுடன் லவ் சிம்பல்: இருவரும் கொண்டாட்ட மனநிலையில் லவ் சிம்பலை கையில் காண்பித்தபடி கொடுத்துள்ள போஸ் சமூக வலைதளங்களில் ட்ரெரண்டாகி வருகிறது. ஆத்விக் மிகவும் சேட்டைக்காரராக இருப்பார் போலிருக்கிறது என்று ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். திரைத்துறையில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள், தங்களது மகனையோ, மகளையோ சினிமாவிலேயே கொண்டுவர முயற்சித்துவரும் சூழலில், தன்னுடைய மகனின் விளையாட்டுத் திறமையை அஜித் ஊக்குவித்து வருகிறார். அவருக்கும் பைக் பந்தயம் மற்றும் சர்வதேச பைக் ரைட் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X