Vidaamuyarchi: அசர்பைஜானிலிருந்து பேக்கப் ஆன விடாமுயற்சி டீம்.. இப்ப எங்க சூட்டிங் தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களாக அசர்பைஜானில் நடைபெற்றது. மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

அஜித்துடன் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்களுடன் இணைந்துள்ள நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அசர்பைஜானில் நடைபெற்றுவந்த முதல்கட்ட சூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Ajiths Vidaamuyarchi movie Azerbaijan shooting wrapped and 2nd schedule starts at Dubai


நடிகர் அஜித்குமார்: கடந்த ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில் அடுத்ததாக கடந்த மே மாதத்திலேயே அவரது பிறந்தநாளையொட்டி விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. உடனடியாக படத்தின் சூட்டிங் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதத்தில்தான் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியது. அசர்பைஜானில் இநத்ப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது.

விடாமுயற்சி பட சூட்டிங்: அசர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாகவும் இதையடுதது அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக தற்போது படக்குழுவினர் துபாயில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப்படம் ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாக வருகிறது. படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், அர்ஜூன்தாஸ், ரெஜினா உள்ளிட்டவர்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர்.

துபாயில் அடுத்தக்கட்ட சூட்டிங்: படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும் படத்தில் சென்டிமெண்ட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது துபாயில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் அடுத்தடுத்து படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காட்சிகள் படத்தில் மிகப்பெரிய பலமாக அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை திரும்பும் திட்டம்: சமீபத்தில் இந்தப் படத்தின் கலை இயக்குநர் மிலன் மரணமடைந்த நிலையில், அவரது மனைவி மரியா மிலன் தற்போது படத்தின் கலை இயக்குநராக மாறியுள்ளார். இவர் தன்னுடைய கணவரிடம் உதவி கலை இயக்குநராக முன்னதாக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அசர்பைஜானில் இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தீபாவளியையொட்டி சென்னை திரும்ப படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

தொடரும் சூட்டிங்: இதனிடையே, ஒரே கட்டமாக படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிடலாம் என்று அஜித் கூறிய நிலையில் தற்போது அடுத்ததாக துபாய் சூட்டிங்கை படக்குழுவினர் துவங்கியுள்ளனர். முன்னதாக அஜித்தின் வலிமை படத்தின் சூட்டிங்கின் இடையில் தீபாவளி பண்டிகை வந்த நிலையில், சூட்டிங்கை தொடர்ந்த படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட்டில்தான் தீபாவளியை கொண்டாடினர். அதேபோல தற்போது விடாமுயற்சி டீமும் துபாயில்தான் தீபாவளியை கொண்டாடுவார்கள் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X