சேஸிங்கும் இருக்கு.. துப்பாக்கியும் இருக்கு.. அஜித்தின் லுக்ஸ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் என முன்னணி நடிகர்கள் கூட்டணியில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் இடையிலேயே முடங்கியது. கடந்த ஆறு மாத காலங்களாக இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்படாத நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி அசர்பைஜானிலேயே மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த படத்தின் சூட்டிங் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே தன்னுடைய மனைவியும் முன்னாள் நடிகையுமான ஷாலினியின் அறுவை சிகிச்சை காரணமாக இடையில் சில தினங்கள் அஜித் சென்னை வந்துள்ளார். முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிக சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்ற நிலையில் இன்றைய தினம் படத்தின் அடுத்தடுத்த லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்த வருகிறார். கடந்த மாதம் 24ம் தேதி இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித்தின் மனைவியும் முன்னால் நடிகையுமான ஷாலினிக்கு உடல் நலக்குறைவு காரணமாக சிறிய அளவிலான ஆபரேஷன் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றிருந்த அஜித், சென்னை வராமல் இருந்த நிலையில் அவர் வர வேண்டிய சூழல் ஏற்பட்டது.
விடாமுயற்சி படம்: இந்நிலையில் மீண்டும் அவர் அசர்பைஜான் சூட்டிங்கில் சில தினங்களில் பங்கேற்கவுள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தனர். இதில் கையில் டிராவல் பேக்குடன் அஜித் காணப்பட்டார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் அடுத்தடுத்து இரு போஸ்டர்களை ஒரே நேரத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவற்றில் நடிகர் அஜித் சேசிங்கில் ஈடுபடுவதாக ஒரு லுக் காணப்பட்டது. அதேபோல கையில் நீண்ட நெடிய துப்பாக்கியுடன் அவர் மிக அழுத்தமான பார்வையுடன் மற்றொரு போஸ்டரில் காணப்படுகிறார். இந்த போஸ்டர்களில் Efforts never fail என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேகம் + விறுவிறுப்பு: கடந்த 6 மாதங்களாக முடங்கியிருந்த விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அதற்கான வேகத்தை படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங்கை இம்மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்த கட்ட மற்றும் சில பேட்ச் வேலைகளுக்காக ஹைதராபாத்தில் பத்து நாட்கள் படத்தின் சூட்டிங் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த சிறப்பான திட்டமிடலுடன் இந்த படத்தின் ஷூட்டிங்கை தற்போது மகிழ் திருமேனி மேற்கொண்டு வருகிறார்.
தீபாவளி ரிலீஸ்?: இந்த படத்தின் சூட்டிங்கை இம்மாதத்திற்குள் நிறைவு செய்துவிட்டு அடுத்த கட்டமாக ஆகஸ்ட் மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித்குமார் இணையவுள்ளார். இந்த படம் பொங்கலையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தீபாவளி மற்றும் பொங்கல் என அடுத்தடுத்த பண்டிகைகளில் இரு மாத இடைவெளிகளில் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களை மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications