விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டர்.. மாஸ் லுக்கில் ரெஜினா கசாண்ட்ரா.. அட பின்னாடி யாருப்பா?
சென்னை: நடிகர் அஜித் அடுத்தடுத்து விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களின் சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் சூழலில் காலையில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலும் மாலையில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்து அஜித் நடித்து வருகிறார்.
தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வரும் சூழலில் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விடாமுயற்சி படத்திற்கான பிரமோ ஒன்றை எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் தற்போது ஒரே நேரத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங்கில் இணைந்து நடிதது வருகிறார். இந்தப் படங்களின் சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டிலேயே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அசர்பைஜானில் துவங்கப்பட்ட நிலையில் இடையில் சில மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் முடங்கியது. இந்நிலையில் கடந்த மாதத்தில் மீண்டும் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோ ஒன்றை எடுக்க இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக படக்குழு மீண்டும் அசர்பைஜான் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
விடாமுயற்சி படம்: மேலும் அசர்பைஜானில் சில பேட்ச் வேலைகளையும் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் மீண்டும் துவங்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து அஜித், திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டவர்களின் போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் முக்கியமான கேரக்டரில் நடித்து வரும் ரெஜினா கசாண்ட்ராவின் கேரக்டர் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் மிகவும் மாஸாக எதிர்பார்ப்புகளை தூண்டும் வகையில் ரெஜினா காணப்படுகிறார்.
புதிய போஸ்டர்: அவருக்கு பின்னால் அஜித் மற்றும் திரிஷா இருவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுவதாகவும் இந்த போஸ்டரில் காணப்படுகிறது. அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் விடாமுயற்சி படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் ஒரு புறம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே விடாமுயற்சி படத்துடன் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கும் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அஜித் மிகவும் சுறுசுறுப்புடன் இந்தப் படங்களின் சூட்டிங்கில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
ரசிகர்கள் கொண்டாட்டம்: குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில மாத இடைவெளியிலேயே அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்த படங்களை பார்க்கவும் வெயிட்டிங்கில் காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











