Actor Ajithkumar: அடுத்தடுத்த போஸ்டர்கள்.. ஒரு முடிவோடத்தான் இருக்காங்க அஜித்தின் விடாமுயற்சி டீம்!

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சில மாதங்களாக தடைபட்டிருந்த நிலையில், கடந்த மாதம் முதல் மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

மீண்டும் சூட்டிங் துவங்கப்பட்ட நாளிலிருந்தே படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அஜித், திரிஷா, அர்ஜுன், ரெஜினா கசண்ட்ரா உள்ளிட்ட படத்தின் கேரக்டர்களின் போஸ்டர்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினமும் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இரு நடிகர்களின் கேரக்டர் போஸ்டர்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Ajith Vidaamuyarchi movie Magizh thirumeni

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் கடந்த ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் சில மாதங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடத்தப்படாமல் முடங்கியது. அசர்பைஜானில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில் அங்கு ஏற்பட்ட கால சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் படத்தின் சூட்டின் முடங்கியது. இந்நிலையில் கடந்த மாதத்தில் மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு அசர்பைஜானில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் சில தினங்கள் இந்த படத்தின் எஞ்சிய காட்சிகளை மகிழ் திருமேனி திட்டமிட்டு இயக்கியுள்ளார்.

விடாமுயற்சி சூட்டிங்: மீண்டும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நாளில் இருந்து அடுத்தடுத்து படத்தின் அப்டேட்களை சமூக வலைதளங்களில் லைகா நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது. படத்தில் அஜித், அர்ஜுன், திரிஷா, ரெஜினா உள்ளிட்டவர்களின் அடுத்தடுத்த கேரக்டர் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினமும் படத்தின் அடுத்தடுத்து இரண்டு நடிகர்களின் போஸ்டர்களை லைகா நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தசரதி மற்றும் கணேஷ் சரவணன் ஆகிய இருவரின் போஸ்டர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

Ajith Vidaamuyarchi movie Magizh thirumeni

ரசிகர்கள் உற்சாகம்: விடாமுயற்சி படம் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பர் துவக்கத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அடுத்தடுத்த போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளையும் படக்குழுவினர் ஜரூராக மேற்கொண்டு வருகின்றனர். படத்தின் டப்பிங் உள்ளிட்ட 80 சதவிகித போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டிலேயே அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாகத்தில் உள்ளனர். இதனிடையே தற்போது ஹைதராபாத்தில் நடந்து வரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிலும் நடிகர் அஜித் நடித்து வருகிறார்

வெற்றிக் கூட்டணி: குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் அஜித்தின் துணிவு படம் வெளியான நிலையில், ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் அவரது விடாமுயற்சி படம் ரிலீசாகவுள்ளது. ஆனால் சில மாத இடைவெளியிலேயே அடுத்தப்படம் ரிலீசாகவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்ததாக கேஜிஎஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அஜித் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளதும் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X