Actor Ajith: மீண்டும் சிக்கலில் விடாமுயற்சி பட சூட்டிங்.. கறார் காட்டுகிறாரா அஜித்?

சென்னை: நடிகர் அஜித் தன்னுடைய குட் பேட் அக்லி படத்தின் முதல் கட்ட சூட்டிங்கை ஐதராபாத்தில் நிறைவு செய்துள்ளார். இந்த படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 20ம் தேதி முதல் அசர்பைஜானில் துவங்கவுள்ள விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க முடியாதபடி மீண்டும் லைகா நிறுவனம் பிரச்சனையில் சிக்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தீர்வு எட்டப்படும் என்றும் திட்டமிட்டபடி வரும் 20ம் தேதி விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Ajith Vidaamuyarchi movie Azerbaijan June tamil cinema

நடிகர் அஜித்குமார்: நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி படம் கடந்த ஆறு மாதங்களாக சூட்டிங் எதுவும் நடத்தப்படாமல் முடங்கியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் வரும் 20ம் தேதி அசர்பைஜானில் மீண்டும் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக படக் குழுவினர் முன்னதாக அசர்பைஜான் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் தாமதத்திற்கு அசர்பைஜானில் நிலவிய சில காலச்சூழல்கள் காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் திரிஷா மற்றும் அர்ஜுன் வேறு படங்களில் நடிக்க துவங்கி விட்டனர். அஜித்தும் குட் பேட் அக்லி படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கறார் காட்டும் அஜித்?: திரிஷா கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வரும் 20ம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அசர்பைஜானில் துவங்க தயாரிப்பு தரப்பு திட்டமிட்டு அதற்கான வேலைகளை செய்துள்ளது. தொடர்ந்து ஒரு மாத காலங்கள் இந்த படத்தின் சூட்டிங் அங்கு நடக்க உள்ளதாகவும் இதற்காக 13 கோடி ரூபாயை லைகா நிறுவனம் ஒதுக்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக அஜித்திற்கு இதுவரை 50 சதவீதம் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதம் தரவேண்டிய சம்பள பாக்கியை கொடுத்தால் மட்டுமே படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்பார் என்றும் அஜித் கறார் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

படக்குழுவினர் அதிர்ச்சி: தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் சூட்டிங் பல்வேறு காரணங்களால் தள்ளி போகும் சூழலில் தற்போது அனைத்து விஷயங்களையும் ஒன்று சேர்த்து மீண்டும் சூட்டிங்கை எடுத்து முடிக்க தயாரிப்பு தரப்பு முயற்சி மேற்கொண்டுள்ள சூழலில் அஜித் இப்படி கூறியது படக் குழுவினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு டப்பிங்கிற்கு முன்னதாக அஜித், தன்னுடைய சம்பளத்தை கேட்டு வாங்கிக் கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக லைகாவின் இந்தியன் 2 படம் இதே போல சில ஆண்டுகள் முடங்கியது.

ரசிகர்கள் அச்சம்: தற்போது இந்தியன் 2 படத்தின் சூட்டிங் நிறைவு செய்யப்பட்டு அடுத்த மாதத்தில் ரிலீசாக உள்ளது. இதனிடையே விடாமுயற்சி படத்திற்கும் அது போன்ற நிலை ஏற்படுமோ என்று ரசிகர்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சிக்கல்களில் இருந்து லைகா நிறுவனம் பேச்சுவார்த்தை மூலம் சரியான விடை கண்டு, படத்தின் சூட்டிங்கை துவங்கி நடத்தி முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டால், அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் எந்த இடையூறும் இல்லாமல் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X