Vidaamuyarchi: விடாமுயற்சி படத்தில் இரட்டை வேடத்தில் அஜித்.. கமிட்டான 2 நாயகிகள்?

சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளிநாட்டில் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

அஜர்பைஜானில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது அதன் தலைநகரில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கில் தற்போது அஜித், த்ரிஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மகிழ் திருமேனி இயக்கிவருகிறது.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting happening in Azerbaijan and 2 heroines joined the movie

விடாமுயற்சி படத்தில் இரட்டை வேடத்தில் அஜித்?: நடிகர் அஜித் நீண்ட காலங்களாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தன்னுடைய சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். சாக்லேட் பாயாக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிய அஜித், தொடர்ந்து அமர்க்களம் உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் அவதாரம் எடுதது ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சமூக அக்கறையுடன் அவரது படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. நடிப்புடன் தன்னுடைய விருப்பமான பைக் பயணத்தையும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த மே மாதத்தில் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில், தற்போதுதான் படத்தின் சூட்டிங் அஜர்பைஜான் தலைநகரில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா இணைந்துள்ளார். அஜித், த்ரிஷா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது வெளிநாட்டில் உள்ளனர். படத்தின் அடுத்தடுத்த சூட்டிங் விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது.

படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகவும் அவருக்கு த்ரிஷா மற்றும் சம்யுக்தா என இரு நாயகிகள் கமிட்டாகியுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. வயதான கேரக்டரில் நடிக்கும் அஜித்திற்கு த்ரிஷாவும், இளமையான தோற்றத்தில் நடிக்கவுள்ள அஜித்திற்கு சம்யுக்தாவும் ஜோடியாகியுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தில் ஹுமா குரோஷி இணைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சம்யுக்தா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் அடுத்தடுத்த சூட்டிங், அஜர்பைஜான், துபாய் மற்றும் சென்னையில் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் ஒட்டுமொத்த சூட்டிங்கையும் நிறைவு செய்யும் படக்குழுவினர், அடுத்ததாக துபாயின் பாலைவனத்தில் படத்தின் பைட் சீன் ஒன்றை திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் சில நாட்கள் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajiths Vidaamuyarchi movie shooting happening in Azerbaijan and 2 heroines joined the movie

முன்னதாக கடந்த ஜனவரியில் வெளியான அஜித்தின் துணிவு படத்தின் வசூல் சர்வதேச பாக்ஸ் ஆபீசில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து கதைக்களத்தை இயக்குநர் ஹெச் வினோத் அமைத்திருந்தார். படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர், அஜித்துடன் இணைந்து நடித்திருந்தார். படத்தில் அஜித்திற்கு ஜோடியில்லை. இதேபோல தான் விடாமுயற்சி படத்திலும் அஜித்திற்கு ஜோடியில்லை என்று முன்னதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X