VidaaMuyarchi: அபுதாபியில் துவங்கும் விடாமுயற்சி சூட்டிங்.. இந்தமுறையாவது நடக்குமா?

சென்னை: நடிகர் அஜித்தின் 62வது படமாக விடாமுயற்சி உருவாகவுள்ளது. இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவிருந்த நிலையில், தற்போது இந்த மாதத்தின் இறுதியில் சூட்டிங் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படம் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அபுதாபியில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Actor Ajiths Vidaamuyarchi shooting expected to begin this month end in Abudhabi

இந்த மாத இறுதியில் அபுதாபியில் துவங்கும் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசானது. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் ஹெச் வினோத். இவர்கள் இருவரின் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியான துணிவு, இருவருக்கும் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே62 படம் குறித்த தகவல்கள் வெளியாகின. படம் மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே சூட்டிங் துவங்கப்பட்டு, தீபாவளி வெளியீடாக ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் கமிட்டாகியிருந்த நிலையில், அவர் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தில் கமிட்டானார். படம் குறித்தும், டைட்டில் குறித்தும் கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டி அறிவிப்பு வெளியானது. படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால் தொடர்ந்து பல மாதங்கள் இந்தப் படம் இழுபறியாகவே உள்ளது. படத்தின் கதையில் அஜித்திற்கு திருப்தி ஏற்படவில்லை என்று பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில் ஒருவழியாக இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் பைக் பயணத்தை மேற்கொண்டுவந்த நடிகர் அஜித், கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடு திரும்பியதையொட்டி இந்தத் தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

ஆனால் படத்தின் சூட்டிங் தற்போது அபுதாபியில் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மகிழ்திருமேனி ஸ்டைலில் ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த சில மாதங்களாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங் குறித்து பல்வேறு யூகங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது இந்த மாத இறுதியில் படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். துணிவு படத்தின்மூலம் சிறப்பான வசூலை கொடுத்திருந்தார் அஜித். அவருக்கு சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அடுத்தடுத்த படங்களை குறிப்பிட்ட திட்டமிடலோடு அவர் அணுக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X