Actor Ajith: விடாமுயற்சி அடுத்தக்கட்ட சூட்டிங்.. திரிஷா கேரக்டர் பெயர் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் தொடர்ந்து அசர்பைஜானில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து இரு ஷெட்யூல்களாக அசர்பைஜானில் நடத்தப்பட்ட நிலையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் மீண்டும் வரும் 7ம் தேதி முதல் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அஜித், திரிஷா உள்ளிட்டவர்களும் இந்த ஷெட்யூலில் பங்கேற்கவுள்ளனர்.
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்டுத்த ஷெட்யூல்கள் அசர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. முதல் கட்டமாக ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் இரண்டாவது ஷெட்யூலில் அஜித், அர்ஜூன் பங்கேற்ற கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் அடுத்தக்கட்ட சூட்டிங் நாளை மறுதினம் முதல் துவங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் வரையில் இந்த சூட்டிங் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் விடாமுயற்சி. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் தொடாந்து நடந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் இரு கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக புத்தாண்டையொட்டி அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டனர். புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகள் அனொஷ்கா பிறந்தநாள் ஆகியவற்றிற்காக நடிகர் அஜித் லண்டன் சென்றிருந்தார். அவரது கொண்டாட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன.
ஞாயிற்றுக்கிழமை சூட்டிங்: இந்நிலையில் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் அசர்பைஜானில் மீண்டும் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக துவங்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் பிப்ரவரி மாதம் வரை தொடரவுள்ளதாகவும் அதையடுத்தே நடிகர் அஜித் சென்னை திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மார்ச் மாதத்தில் இருந்து ஏகே63 படத்திற்காக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் முன்னதாக பிப்ரவரி மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
அசர்பைஜான் திரும்பும் திரிஷா: இதனிடையே டொவினோ தாமஸ் படத்திற்காக சென்னை திரும்பிய நடிகை திரிஷாவும் இந்த வாரத்தில் அசர்பைஜான் திரும்பவுள்ளார். தொடர்ந்து அவருக்கும் அஜித்திற்கும் இடையிலான காம்பினேஷன் காட்சிகளை மகிழ் திருமேனி அடுத்ததாக படமாக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக்ஷன் திரில்லராக படமாக்கப்படவுள்ள இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் கேரக்டர் பெயர் முன்னதாக வெளியானது. இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அர்ஜூன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் நடித்துவரும் சூழலில் இரண்டு அர்ஜூன்களா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
திரிஷா கேரக்டர் பெயர்: இந்நிலையில் திரிஷா இந்தப் படத்தில் கயல் என்ற கேரக்டரில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அஜித் -திரிஷா கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்த நிலையில், இந்தப் படத்தில் இவர்களது ஜோடி எப்படி அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். முற்றிலும் வெளிநாட்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டுவரும் சூழலில் மிகவும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் அஜித் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் திட்டம்: இந்தப் படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் கழிந்தே சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் அடுத்தாக தன்னுடைய ஏகே63 படத்தின் சூட்டிங்கை உடனடியாக துவங்க அஜித் திட்டமிட்டுள்ளார். மார்ச் மாதத்தில் ஏகே63 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இந்தப் படத்திற்காக அஜித்திற்கு 163 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் தன்னுடைய உலக பைக் பயணத்தை அஜித் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அடுத்ததாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











