Vidaamuyarchi: விஜய்யால் சூட்டிங் ஸ்பாட்டை மாற்றிய விடாமுயற்சி டீம்.. என்னன்னு பாருங்க!

சென்னை: நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி படம் அஜர்பைஜானில் கடந்த சில வாரங்களாக சூட்டிங் நடத்தி வந்தது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

அஜித்தின் 62வது படமான விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா தயாரித்து வருகிறது.

Actor Ajiths Vidaamuyarchi team changed shooting spot because of this reason

ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது.

அஜித்தின் துணிவு படம்: நடிகர் அஜித்தின் துணிவு படம் கடந்த ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் ஹெச் வினோத். படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. மேலும் வங்கிகளின் மோசடி குறித்தும் இந்தப் படம் வெளிப்படுத்தியது. சாதாரண மக்களின் பிரச்சினைகளும் அலசப்பட்டன.

விடாமுயற்சி படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் 62வது படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில், அந்தப் படம் கைவிடப்பட்டது. அடுத்ததாக மகிழ் திருமேனி இந்தப் படத்தில் கமிட்டானார். படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளையொட்டி வெளியானது. ஆனால் சூட்டிங் துவங்குவதில் தாமதம் காணப்பட்டது. படத்தின் நாயகிகளாக த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகியோர் இணைந்துள்ளனர்.

அஜர்பைஜானில் நடந்த சூட்டிங்: இந்நிலையில் படத்தின் சூட்டிங் கடந்த மாதத்தில் அஜர்பைஜானில் துவங்கி விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் சூட்டிங் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து படத்தின் அதிகப்பட்ச சூட்டிங் அங்கேயே நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர். ஏறக்குறைய ஒட்டுமொத்த சூட்டிங்கும் அங்கேயே நடக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திரும்பிய படக்குழு: இந்நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் துபாயில் சில தினங்களில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங், அஜர்பைஜானில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதனால்தான் விடாமுயற்சி டீம் அங்கிருந்து பேக்கப் செய்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற விஷயங்கள் கோலிவுட்டில் சமீப காலங்களில் அதிகரித்து காணப்படுகிறது.

அடுத்தடுத்த சம்பவங்கள்: சமீபத்தில் ரஜினியின் தலைவர் 170 படத்தின் சூட்டிங் பிரசாத் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டதால், அங்கு சூட்டிங் நடத்திவந்த விஜய்யின் தளபதி 68 டீம் மற்றொரு இடத்திற்கு சூட்டிங் ஸ்பாட்டை மாற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது விடாமுயற்சி டீம் இதுபோன்ற காரணத்திற்காக சூட்டிங் ஸ்பாட்டை துபாய்க்கு மாற்றியுள்ளது. அங்கு சேஸிங் காட்சிகளை படமாக்கவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

எடுத்துக்காட்டாய் ரஜினி -கமல் நட்பு: கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி மற்றும் கமல் இருவரின் படங்களும் ஒரே ஸ்பாட்டில் சூட்டிங் நடந்த நிலையில், இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி சந்தித்துக் கொண்டனர். சமூக வலைதளங்களில் இதற்கான புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதலில் ரஜினியின் தலைவர் 170 பட ஸ்பாட்டிற்கு கமல் வந்த நிலையில், தொடர்ந்து அவரின் இந்தியன் 2 பட சூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினியும் விசிட் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒற்றுமை அடுத்த தலைமுறையிடம் இல்லாத நிலை காணப்படுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X