Vidaamuyarchi: லொகேஷன்.. ஹீரோயின்.. அடுத்தடுத்த மாற்றங்களை செய்த விடாமுயற்சி டீம்!
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் இரு தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு அஜித் உள்ளிட்ட விடாமுயற்சி டீம் அஜர்பைஜான் புறப்பட்டு சென்றனர்.

படத்தில் அஜித்திற்கு ஜோடியில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தில் த்ரிஷா உள்ளிட்ட இரு நாயகிகள் இணைந்துள்ளனர்.
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் லொகேஷன் மாற்றம்: நடிகர் அஜித் நடிப்பில் அவரது 62வது படமாக உருவாகவுள்ளது விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த மே மாதம் அஜித் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போன நிலையில், தற்போது அஜர்பைஜானில் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை மேற்கொள்ள படக்குழுவினர் புறப்பட்டு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல்கட்ட சூட்டிங் அஜர்பைஜானில் துவங்கி தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்தப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. இதையொட்டி அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். அவர்களின் விமானநிலைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அஜித்தின் படம் எப்போதுதான் துவங்கும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்கள் உற்சாகத்தை கொடுத்துள்ளன.
இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் படத்தில் த்ரிஷா மற்றும் ஹுமா குரோஷி என இரு நாயகிகள் கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்திலிருந்து ஹுமா குரோஷி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக, ரெஜினா கசாண்ட்ரா இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த ஹுமா குரேஷி, தற்போது விடாமுயற்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, நாயகி மாற்றம் மட்டுமில்லாமல் லொகேஷனையும் தற்போது விடாமுயற்சி டீம் மாற்றியுள்ளது. அஜர்பைஜானில் நடக்கவிருந்த இந்தப் படத்தின் சூட்டிங், அதன் தலைநகரான பாகுவிற்கு மாற்றப்பட்டுள்ளது. அஜர்பைஜானில் தற்போது வகுப்புவாத மோதல் ஒன்று நடந்துவருவதால், அதனிடையே சூட்டிங்கை நடத்துவதால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, படக்குழுவினர் இந்த லொகேஷன் மாற்றத்தை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மோதல் நின்றால் மீண்டும் அஜர்பைஜானுக்கு படக்குழுவினர் திரும்புவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சூட்டிங்கை முடித்துக்கொண்டு, அடுத்தக்கட்டமாக துபாயில் பாலைவனப்பகுதியில் முக்கியமான ஃபைட் சீன் ஒன்றையும் எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு இடங்களில் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சென்னையில் சில தினங்கள் சூட்டிங் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











