Ajith: லண்டனும் இல்லை.. ஹாங்காங்கும் இல்லை.. விடாமுயற்சி சூட்டிங் எங்க தெரியுமா?
சென்னை: நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படம் எப்போது சூட்டிங் துவங்கும் என்பதுதான் அவரது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
கடந்த ஜனவரியில் அவரது துணிவு படம் பொங்கல் கொண்டாட்டமாக வெளியான நிலையில், பிப்ரவரி, மார்ச் மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவரது ஏகே62 படத்தின் துவக்கத்திலேயே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. இயக்குநர் விக்னேஷ் சிவன் மாற்றப்பட்டார். மகிழ் திருமேனி கமிட்டானார். தொடர்ந்து சூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் இல்லை.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் எங்க தெரியுமா?: நடிகர் அஜித்குமாரின் அடுத்தடுத்த மூன்று படங்களை இயக்கினார் ஹெச் வினோத். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அவரது இயக்கத்தில் அஜித் நடித்திருந்த துணிவு படம் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது. முன்னதாக வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இந்நிலையில் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு வெளியான துணிவு படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இந்தப் படத்தின் சூட்டிங்கின்போதே, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், துணிவு ரிலீசை தொடர்ந்து உடனடியாக இந்தப்படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், படத்தின் ஸ்கிரிப்ட்டில் அஜித்திற்கு நிறைவு ஏற்படவில்லை என்று கூறப்பட்டு, விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டார். படத்தின் இயக்குநராக கமிட்டானார் மகிழ்திருமேனி. இந்தப் படத்தின் அறிவிப்பை மேற்கொள்ளவும் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த மே மாதத்தில் அஜித் பிறந்தநாளையொட்டி படத்தின் அறிவிப்பை மேற்கொண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா, படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்று அறிவித்தது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து படத்தின் சூட்டிங் உடனடியாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் அறிவிப்பு செய்யப்பட்டு, ஏறக்குறைய 4 மாதங்கள் ஆன நிலையில், இன்னும் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனிடையே, தன்னுடைய பைக் பயணத்திற்காக வெளிநாட்டில் தொடர்ந்து பல மாதங்களாக முகாமிட்டிருந்தார் அஜித்.

தற்போது அவர் சென்னை திரும்பியுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் அடுத்தமாதம் இறுதியில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக லண்டனில் இந்தப் படத்தின் சூட்டிங் ஒரே ஷெட்யூலாக நடக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து படத்தின் சூட்டிங் ஹாங்காங்கில் நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் துபாயில் நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த மாத இறுதியில் துவங்கப்பட உள்ள சூட்டிங், தொடர்ந்து இரு மாதங்கள் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக இந்தப் படம் கைவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ரசிகர்களும் இந்த விஷயத்தில் நடிகர் அஜித்தின் முடிவு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டில் பேசிய லைகா நிறுவனர் சுபாஷ்கரன், விடாமுயற்சி தங்களின் பெருமைமிகு தயாரிப்பு என்றும் அதை கைவிட வாய்ப்பே இல்லை என்றும் கூறி ரசிகர்கள் மனதில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளார். விரைவில் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











