Ajith: அஜர்பைஜானுக்கு போகும் விடாமுயற்சி டீம்.. எத்தனை நாள் சூட்டிங் தெரியுமா?

சென்னை: நடிகர் அஜித் தன்னுடைய வெளிநாட்டு பைக் டூர் பயணங்களை ஓரளவிற்கு நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளார். அஜர்பைஜான், துபாய், சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி படக்குழுவினர் வெளிநாடு செல்ல டிக்கெட்டுகளும் புக் செய்யப்பட்டு விட்டதாக படக்குழுவினர் தற்போது அப்டேட் தெரிவித்துள்ளனர்.

Actor Ajiths Vidamuyarchi team plans to go for Azerbhaijan for first schedule shooting

முதல்கட்ட படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்லும் விடாமுயற்சி டீம்: நடிகர் அஜித்தின் துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு கடந்த ஜனவரியில் வெளியானது. விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து, வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஹெச் வினோத் -அஜித் கூட்டணியில் இந்தப்படம் மூன்றாவது படமாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் வெளியானது.

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக தள்ளிப் போனது. இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி விடாமுயற்சி படத்தின் சூட்டிங் அஜர் பைஜானில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய ஓமன் பைக் டூரை முடித்துக் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பியுள்ள அஜித், இந்த படத்தின் சூட்டிங்கில் பங்கேற்கவுள்ளார். சூட்டிங்கிற்காக படக்குழுவினர் வரும் 30ம் தேதி தங்களது பயணத்தை துவங்கவுள்ளனர்.

அஜர் பைஜானில் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 35 முதல் 40 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் இதையடுத்து சென்னை திரும்பும் படக்குழுவினர் சென்னையில் இரண்டாவது கட்ட சூட்டிங்கை தொடரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் துபாயில் பாலைவன பின்னணியில் ஒரு ஃபைட் சீனும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில நாயகியாக கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் சுற்றுலாவில் உள்ள அவர், நேரடியாக இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Ajiths Vidamuyarchi team plans to go for Azerbhaijan for first schedule shooting

படத்தில் மற்றொரு நாயகியாக வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த ஹுமா குரேஷியும் கமிட்டாகியுள்ளார். ஏற்கனவே படத்தின் சூட்டிங் ஏறக்குறைய 5 மாதங்கள் தள்ளிப் போயுள்ள நிலையில், தற்போது படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இந்தப் படத்தின் சூட்டிங்கில் எடிட்டரையும் உடன் அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனுக்குடன் எடிட்டிங்கையும் முடித்து படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை சிறப்பாக நிறைவு செய்ய மகிழ்திருமேனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் கமிட்டாகியிருந்தார். ஆனால் இந்தப் படத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X