நெற்றிக்கண் வில்லனுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் நயன்தாரா!

சென்னை : பிரபல கொரியன் திரைப்படமான ப்ளைண்ட் தமிழில் நெற்றிக்கண் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நயன்தாராவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

ஹீரோவாக பல படங்களில் நடித்திருந்தாலும் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போராடிக்கொண்டிருந்த நடிகர் அஜ்மல் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார்.

நெற்றிக்கண் ரிலீசுக்கு பிறகு பட வாய்ப்புகள் குவிந்து வர இப்பொழுது மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடிக்க அஜ்மல் ஒப்பந்தமாகியுள்ளார்.

இசையை மையமாக

இசையை மையமாக

பிரேமம் என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் அதன்பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக இசையை மையமாக வைத்து படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அந்த படத்திற்கு பாட்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்திருந்தார். இதில் பகத் பாசில் மற்றும் நயன்தாரா இருவரும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது.

சைக்கோ வில்லனாக

சைக்கோ வில்லனாக

பிரித்திவிராஜ் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் திரில்லர் கலந்த காதல் படமாக உருவாகிறது இதில் ஹீரோயினாக நடிகை நயன்தாரா நடிக்க உள்ளார். நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் சைக்கோ வில்லனாக நடிகர் அஜ்மல் நடித்து மிரட்டியிருப்பார்.

அங்கீகாரம் கிடைக்காமல்

அங்கீகாரம் கிடைக்காமல்

அஞ்சாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அஜ்மல் அதன் பிறகு திரு திரு துரு துரு, கோ, கருப்பம்பட்டி,வெற்றிச்செல்வன், இரவுக்கு ஆயிரம் கண்கள், சித்திரம் பேசுதடி 2, தேவி 2, நுங்கம்பாக்கம் என பல திரைப்படங்களில் நடித்திருந்தும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் திரைத்துறையில் போராடிக் கொண்டிருந்தார்.

கோல்ட் படத்தில் இணைகிறேன்

கோல்ட் படத்தில் இணைகிறேன்

இந்த நிலையில் நெற்றிக்கண் திரைப்படத்தில் இவரின் மிரட்டலான நடிப்பை பார்த்து பலரும் பாராட்டினர். இப்பொழுது புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் கோல்ட் திரைப்படத்தில் நடிக்கயிருப்பதாக அஜ்மல் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X