Actor Ajmal: GOAT படத்தில் தன்னுடைய போர்ஷனை நிறைவு செய்த அஜ்மல்.. அட என்ன இப்படி சொல்லியிருக்காரு!

சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்யின் மகன் கேரக்டருக்காக டீ ஏஜிங் வேலைகளுக்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே படத்தின் விஎப்எக்ஸ் வேலைகள் நிறைவடைந்துள்ளதாக வெங்கட் பிரபு சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் அஜ்மல் தன்னுடைய போர்ஷன்கள் குறித்து புதிய அப்டேட்டை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Actor Ajmal updates about his portions in Vijay s GOAT movie

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் சென்னையில் நடைபெறும் சூழ்நிலையில் இன்னும் சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடையவுள்ளது. படத்தில் விஜய்யின் மகன் கேரக்டரின் டீ ஏஜிங் வேலைகளுக்காக நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர். அங்கு விஜய்யை வைத்து இரு தினங்கள் ஷூட்டிங் எடுக்கப்பட்டு இதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

அஜ்மல் அப்டேட்: படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். விஜய்க்கு வில்லனாகியுள்ளார் நடிகர் மோகன். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தில் தன்னுடைய போர்ஷன்களை நிறைவு செய்துள்ளதாக நடிகர் அஜ்மல் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதையொட்டி சிறப்பான புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். கோட் படத்தில் பயணம் செய்தது மிகவும் சிறப்பாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Actor Ajmal updates about his portions in Vijay s GOAT movie

VFX பணிகள் நிறைவு: இந்தப் படத்தின் கேரக்டர் குறித்து உற்சாகம் தெரிவித்துள்ள அஜ்மல், தன்னுடைய அடுத்தப்பட கேரக்டரும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் அதை விரைவில் வெளிப்படுத்தவுள்ளதாகவும் கூறியுள்ளார். டைம் டிராவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கோட் படத்தில் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களின் நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்துள்ளனர். நடிகை திரிஷா இந்த படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் வெங்கட்பிரபு சில தினங்களுக்கு முன்பு அப்டேட் தெரிவித்திருந்தார்.

தளபதி 69 படம்: கோட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளையும் ஒருபுறம் படக்குழுவினர் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களுக்கு என்டர்டெயின்மெண்டை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் தளபதி 69 படம் குறித்த அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். இந்தப் படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில், படத்தில் விஜய்யுடன் இணையவுள்ள நாயகி குறித்து நித்தம் ஒரு தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X