மாஜி அண்ணிக்காக மனம் உருகிய அகில்..Dear Sam..விரைவில் குணமடையணும்.. நாகசைத்தன்யாவின் சகோதரர் ட்விட்!

சென்னை : நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயில் இருந்து விரைவில் குணமடைய நாகசைத்தன்யாவின் சகோதரர் அகில் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சமந்தா நடிப்பில் வெளியாகவுள்ள படம் யசோதா தமிழ், தெலுங்கு. கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஹரி & ஹரீஷ் இயக்கியுள்ளனர்.

நடிகை சமந்தா ரூத் பிரபு

நடிகை சமந்தா ரூத் பிரபு

நடிகை சமந்தா ரூத் பிரபு, அரியவகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த நோய் உடலின் தசைகள் மற்றும் மூட்டுகளை பாதிக்கும் ஒரு ஆட்டோ இம்யூன் கோளாராகும். இந்த பாதிப்பை ஏற்றுக்கொண்டு, சிகிச்சையை போராடி பெற்றுக் கொள்வதும் அவசியமான ஒன்றாக கருதுகிறேன். நான் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என்று மருத்துவர்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்து இருக்கின்றனர்.

குணமடைந்து வருகிறேன்

குணமடைந்து வருகிறேன்

இந்த பிரச்சனையிலிருந்து குணமடைந்த பிறகு இதுகுறித்து பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்ததை விட தற்போது சிகிச்சைக்கு அதிக நேரமாகிவிட்டது. இதனால், இப்போது இதை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நான் தற்போது மெதுவாக குணமாகி கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் நல்ல நாட்களும் கெட்ட நாட்களும் உண்டு என்பதை நான் உணர்கிறேன். என மிகுந்த உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார்.

Dear Sam

Dear Sam

சமந்தாவின் இந்த உருக்கமான பதிவினைப்பார்த்த கியாரா அத்வானி, ஜான்வி கபூர், சோஃபி சவுத்ரி, லக்ஷ்மி மஞ்சு போன்ற பிரபலங்கள் அவருக்கு இதயத்தை பரிசாக அளித்து பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல நாகசைத்தன்யாவின் சகோதரர் அகில் அக்கினேனி "All the love and strength to you dear Sam'' என பதிவிட்டுள்ளார். நாகசைத்தன்யா சமந்தாவுக்கு இதுவரை ஆறுதல் சொல்லாத நிலையில், அகில் அக்கினேனி கூறி உள்ளதை பலரும் பாராட்டி உள்ளனர்.

அகில் அக்கினேனி

அகில் அக்கினேனி

அகில் அக்கினேனி நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவியான அமலா மகன் ஆவார். நாகார்ஜுனா மற்றும் லட்சுமி டக்குபதி தம்பதியின் மகன் தான் நாக சைதன்யா. நாகார்ஜுனா மற்றும் லட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவரை விவாகரத்து செய்து விட்டு, இரண்டாவதாக அமலாவை மணந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X