பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இன்று பிறந்தநாள்... ஒன்றுகூடி வாழ்த்திய திரைப்பிரபலங்கள் !

மும்பை : பாலிவுட்டில் முன்னணி நடிகராகவும் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய பாலிவுட் நடிகராகவும் புகழ் பெற்று இருப்பவர் நடிகர் அக்ஷய் குமார்.

காமெடி கலந்த அசாத்தியமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வரும் இவர் இப்பொழுது பாலிவுட்டின் நம்பர் ஒன் நடிகர்களில் இவரும் ஒருவராவார்.

தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்று இந்தியாவில் அனைத்து மொழியினரிடமும் பிரபலமாக உள்ள இவர் செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று தனது 53 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் அதே சமயம் திரையுலகினர் பலரும் ஒன்றுகூடி இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

1990 களின் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்கத் தொடங்கிய அக்ஷய்குமார் இன்றுவரை ஓயவில்லை. இந்திய சினிமாவில் அக்ஷய் குமாரின் பங்கு மிகப் பெரியது. இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இன்றுவரை இல்லை என்ற நிலையில் சமீபத்தில் உலக அளவில் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர்களின் பட்டியலை தயார் செய்தபோது அதில் இந்திய நடிகர்களில் அக்ஷய் குமார் முன்னணியில் இருந்தார்.

தொட்டதெல்லாம் வெற்றி

தொட்டதெல்லாம் வெற்றி

இந்தியில் முதன்முதலில் "சவுகன்த்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்ட அக்ஷய் குமார் அதில் ராக்கி மற்றும் சாந்திப்பிரியா-வுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சவுகன்த் படத்திற்கு பிறகு டான்ஸர், கில்லாடி, மிஸ்டர் பாண்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவருக்கு அவை அனைத்தும் சுமாரான வெற்றிகளையும் தோல்விகளையும் மட்டுமே தழுவி வந்த நிலையில் ராஜீவ் ராய் இயக்கத்தில் இவர் நடித்த "மஹ்ரா" திரைப்படம் அந்த ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளிய திரைப்படமாக சக்கை போடு போட்டது. அதற்குப் பின் அக்ஷய்குமார் தொட்டதெல்லாம் வெற்றி போல தொடர்ந்து வெற்றி திரைப்படங்களில் நடித்து தன்னை ஒரு வெற்றி கதாநாயகனாக மக்கள் மனதில் நிலை நிறுத்திக் கொண்டார்.

தேசிய விருது

தேசிய விருது

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட அக்ஷய்குமார் பாலிவுட்டில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளை கடந்து தொடர்ந்து முன்னணி நடிகராக நிலைத்து நின்று வரும் நிலையில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தும் பல திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு செய்து கலக்கி அதற்காக பல்வேறு விருதுகள் பெற்ற அக்ஷய்குமார் ரஸ்டம் மற்றும் பாட்மேன் உள்ளிட்ட சமூக சிந்தனை கொண்ட திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகராக தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

காமெடியிலும்

காமெடியிலும்

ஆரம்பத்தில் இவர் நடிக்க தொடங்கிய காலத்தில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த இவர், பின் பல்வேறு காமெடித் திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து அசத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் காமெடியிலும் பின்னி பெடலெடுக்கும் அக்ஷய்குமார் சமீபத்தில் நடித்த குட்லக் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க இப்பொழுது "லக்ஷ்மி பாம்" " சூர்யவன்ஷி" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருவதோடு அவை இப்பொழுது வெளியீட்டுக்காக தயாராக உள்ளது.

அறிமுகமானார்

அறிமுகமானார்

இந்தியில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த அக்ஷய்குமார் தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பரிச்சயமான நிலையில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார்.

மேன் வெர்சஸ் வைல்ட்

மேன் வெர்சஸ் வைல்ட்

தமிழில் இவர் அறிமுகமான முதல் திரைப்படமே வில்லன் கதாபாத்திரமாக அமைந்த நிலையில், அதையும் தமிழ் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு அக்ஷய் குமாரை கொண்டாடினார்கள். இவ்வாறு 2.0 திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மேலும் நெருக்கமான அக்ஷய்குமார் சமீபத்தில் " மேன் வெர்சஸ் வைல்ட் " நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார்.

பிரம்மாண்ட முறையில்

பிரம்மாண்ட முறையில்

அக்ஷய்குமார் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பல்வேறு விளம்பரங்களில் நடித்து பிரபலமாக உள்ள நிலையில், சமீபத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பப்ஜி செயலிக்கு மாற்றாக ஃபக்ஜி என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட புதிய செயலியை பிரம்மாண்ட முறையில் அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சாரும்.

Recommended Video

LOCKDOWN ல SHOOT பண்ண முதல் படம் | ACTOR THALAIVASAL VIJAY EXCLUSIVE | FILMIBEAT TAMIL
திரையுலகினர் வாழ்த்து

திரையுலகினர் வாழ்த்து

இவ்வாறு தனது படங்களின் மூலம் இந்திய திரைப்படத்துறையின் தரத்தை உலக அளவில் பிரதிபலிக்கச் செய்ததில் நடிகர் அக்ஷய்குமாருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்ற நிலையில் செப்டம்பர் 9 ஆம் தேதியான இன்று அக்ஷய்குமார் தனது 53வது பிறந்த நாளில் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி அவரது நண்பர்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில், திரையுலகினர் பலரும் ஒன்றுகூடி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X