ரஜினி வில்லனுக்கு குறும்பு மனசு.. மனைவிக்கு எவ்ளோ காஸ்ட்லியான தோடு வாங்கிக் கொடுத்திருக்காரு பாருங்க
நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவிக்கு வெங்காயத்தால் ஆன காதணிகளை பரிசாக அளித்துள்ளார்.
சென்னை: நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவிக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளை பரிசளித்து, அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
நாட்டின் இன்றைய ஹாட் டாப்பிக் வெங்காய விலை தான். வெங்காயத்தின் விலையை கேட்டாலே குடும்பஸ்தர்கள் கண்களில் கண்ணீர் கொட்டுகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்கிறது.

வெங்காய விலையை வைத்து ஒருபுறம் கவலை ஏற்பட்டாலும், மறுபுறம் அதை வைத்து பல காமெடிகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு கிலோ வெங்காயத்தை வாங்கிவிட்டு, தாங்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துவிட்டது போல் பலரும் போட்டோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் அதில் சேர்ந்துள்ளார். அவர் தனது மனைவி நடிகை டிவிங்கிள் கண்ணாவுக்கு வெங்காயத்தால் செய்யப்பட்ட காதணிகளை பரிசளித்துள்ளார். கணவரின் பரிசை பார்த்து நெகிழ்ந்துபோன டிவிங்கிள், "இப்போதைய சிறந்த விருது", என பாராட்டியுள்ளார்.
தனது கணவர் பரிசளித்த வெங்காய காதணிகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் டிவிங்கிள். இதைபார்த்த நெட்டிசன்கள், அக்ஷயை பாராட்டி வருகின்றனர். உலக காஸ்ட்லியான கிப்ட் என்பது உள்ளிட்ட கமெண்டுகளும் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











