உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்த பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார்!

சென்னை: உலகில் அதிகம் சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் 6வது இடத்தை பிடித்துள்ளார்.

ஃபோர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் உலகளவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது

பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். 52 வயதான அக்ஷய் குமார் படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி விளம்பரங்களில் நடித்தும் சம்பாதித்து வருகிறார்.

அள்ளிக்கொடுத்தார்

அள்ளிக்கொடுத்தார்

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2 படத்தில் நடித்திருந்தார் அக்ஷய்குமார். நாடே கொரோனா தொற்றால் திக்குமுக்காடிய நிலையில் சினிமா தொழிலாளர்கள் உட்பட பலருக்கும் கோடி கோடியாக அள்ளிக்கொடுத்தார். பிரதமர் நிவாரணத் தொகைக்கும் 25 கோடி ரூபாய் கொடுத்து ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தார்.

அதிக சம்பளம்

அதிக சம்பளம்

இந்நிலையில், அக்ஷய்குமார் ஃபோர்ப்ஸின் அதிக சம்பளம் வாங்கும் முதல் 10 ஆண் நடிகர்களின் பட்டியலில் 6 வது இடத்தை பிடித்துள்ளார். அவரது ஆண்டு வருவாய் 48.5 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அக்ஷய் குமார்தால் இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்தியர் ஆவார்.
இதன் மூலம் ஃபோர்ப்ஸ் பட்டியலில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இடம்பிடித்த இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் அக்ஷய்குமார்.

6 வது இடத்தில்

6 வது இடத்தில்

ஃபோர்ப்ஸின் 2019 ஆம் ஆண்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில், அக்‌ஷய் குமார் நான்காவது இடத்தைப் பிடித்தார். இந்த ஆண்டு 6வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த ஆண்டு பட்டியலில் மல்யுத்த வீரராக மாறிய நடிகர் டுவைன் ஜான்சன் முதலிடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டும் இவர்தான் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.

நான்கு ஐந்தாவது இடங்கள்

நான்கு ஐந்தாவது இடங்கள்

இந்த பட்டியலின் இரண்டாவது இடத்தில் ரியான் ரெனால்ட்ஸ் 71.5 மில்லியன் டாலர் வருமானத்துடன் உள்ளார். மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்கள் முறையே நடிகர்கள் மார்க் வால்ல்பெர்க், பென் அஃப்லெக் மற்றும் வின் டீசல் ஆகியோருக்கு சென்றுள்ளன.

ஒரே பாலிவுட் நடிகர்

ஒரே பாலிவுட் நடிகர்

மேலும் வரவிருக்கும் அமேசான் பிரைம் தொடரான ​​தி எண்டில் டிஜிட்டல் அறிமுகத்திற்காக, அக்‌ஷய் குமார் 10 மில்லியன் டாலர் சம்பளத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பட்டியலில் உள்ள ஒரே பாலிவுட் நட்சத்திரம், அக்ஷய் குமார் தான் என்று குறிப்பிட்டுள்ளது.

விளம்பரங்கள் மூலம்

விளம்பரங்கள் மூலம்

தனது முதல் தொலைக்காட்சி தொடரான ​​தி எண்ட் சீரிஸில் அமேஸானாக்காக நடிக்கிறார் என்றும் அக்ஷய் குமாரின் வருவாயில் பெரும்பகுதி விளம்பரங்களிலிருந்தே தவிர திரைப்படங்களில் இருந்து அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது.

டாய்லெட் க்ளீனர் வரை

டாய்லெட் க்ளீனர் வரை

மேலும் அக்ஷய் குமார் வருமானத்தின் பெரும்பகுதி ஒப்புதல் ஒப்பந்தங்களிலிருந்து வருகிறது என்றும் மல்டிவைட்டமின்கள் முதல் டாய்லெட் க்ளீனர் வரை அனைத்திற்கும் அவர் போலி வாடிக்கையாளராக உள்ளார் என்றும் அப்பட்டமாக அவர் குறித்து விவரித்துள்ளது ஃபோர்ப்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X