இந்தா, அடுத்தாப்ல இந்த ஹீரோ... ரஜினிகாந்தைத் தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகிழ்ச்சியில் அக்ஷய்
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்தைத் தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய்குமார் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி, மேன் வெர்சஸ் வைல்ட். ஏராளமான ரசிகர்களைக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்துகொண்டார். இதன் படப்பிடிப்பு கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடந்தது.

புலிகள் காப்பகம்
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டில் உள்ள புலிகள் காப்பகத்தில் நடந்த இதன் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், காட்டுப்பகுதியில் 2 நாட்கள் தங்கியிருந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

சிறிய அளவில் காயம்
நடிகர் ரஜினிகாந்த் தன் வாழ்க்கை பயணம் பற்றி பியர் கிரில்சுடன் பேசுவது போல இந்நிகழ்ச்சி அமையும் என்று தெரிகிறது. இந்தப் படப்பிடிப்பில் அவருக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டது என்றும் இதனால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்த ரஜினிகாந்த், தனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முட்கள்தான் குத்தியது என்று தெரிவித்தார்.

மாற்றிய பியர் கிரில்ஸ்
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என ரஜினிகாந்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பியர் கிரில்ஸ் ட்வீட் செய்திருந்தார். பின்னர் ரசிகர்கள் விமர்சித்ததைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் என பியர் கிரில்ஸ் மாற்றினார்.
அக்ஷய்குமார்
இந்நிலையில் ரஜினிகாந்தைத் தொடர்ந்து நடிகர் அக்ஷய்குமாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதற்காக நேற்று அவர் மைசூரு சென்றார். அங்கிருந்து அவர் பந்திப்பூர் காட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இன்றும் நாளையும் பியர் கிரில்ஸ் உடன் படப்பிடிப்பில் பங்கேற்கிறார் என்று கூறப்படுகிறது. பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்தை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூன்றாவது இந்தியர் அக்ஷய்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











