யானை சாணத்தில் போட்ட டீயை குடித்த பிரபல நடிகர்.. பியர் கிரில்ஸின் வைரல் டீஸர்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய்குமார் பங்கேற்ற பியர் கிரில்ஸின் இன்டு தி வைல்டு நிகழ்ச்சியின் டிஸர் வைரலாகி வருகிறது.
Recommended Video
டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி பெரும் பிரபலமானது. இந்நிகழ்ச்சியின் இயக்குநரான பியர் கிரில்ஸ்தான் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் காடு. மலை உள்ளிட்ட ஆள் நடமாட்டம் இல்லாத பகுயில் எப்படி தப்பி வாழ்வது என்பதை காட்சிப் படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக்கப்படுகிறது.

ரஜினிகாந்த் பங்கேற்பு
உலகப்புகழ் பெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, இந்திய பிரதமர் மோடி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி கடந்த மார்ச் மாதம் ஒளிப்பரப்பானது.

டிவிட்டரில் ஷேர்
இந்நிலையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இதன் டீஸர் நேற்று வெளியானது. இந்த டீஸரை நடிகர் அக்ஷய்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

யானை சாணத்தில் டீ
அதில் பியர் கிரில்ஸ் உடன் #IntoTheWild நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அதில் அதிக சவால்கள் இருக்கும் என நான் நினைத்தேன். ஆனால் பியர் கிரில்ஸ் எனக்கு யானை சாணத்தில் டீ போட்டு கொடுத்து சர்ப்ரைஸ் ஆக்கிவிட்டார். என்ன நாள் இது.. என குறிப்பிட்டுள்ளார்.

ரியல் ஹீரோ
மேலும் அந்த டீஸரில் நான் ரீல் ஹீரோ, அவர் ஒரு ரியல் ஹீரோ என்றும் கூறியிருக்கிறார். மேலும் ஓடும் வண்டியில் ரன்னிங்கில் ஏறுவது ரன்னிங்கில் இறங்குவது, வனப்பகுதிக்குள் உள்ள ஏரியில் நீந்துவது, கயிறைப் பிடித்துக் கொண்டு ஏறுவது என பல சாகங்களை புரிந்துள்ளார் அக்ஷய் குமார்.

நிச்சயம் பார்க்க வேண்டும்
அக்ஷய் குமாரின் இந்த வீடியோ இதுவரை 80 ஆயிரம் லைக்ஸ்களை குவித்துள்ளது. டீஸரை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறோம், நிச்சயம் பார்க்க வேண்டும் என கமெண்ட் செய்து இப்போதே தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











