Allu Arjun met Atlee: மும்பையில் அல்லு அர்ஜூனை சந்தித்த இயக்குநர் அட்லீ.. என்ன நடந்துச்சு தெரியுமா?
மும்பை: இயக்குநர் அட்லீ -ஷாருக்கான் கூட்டணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜவான் படம் சர்வதேச அளவில் 900 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளது.
பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ. அவருக்கு இந்தப் படம் சிறப்பான என்ட்ரியை கொடுத்துள்ளது.
இந்திய அளவில் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறியுள்ளார் அட்லீ. அவரது சம்பளமும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பையில் சந்தித்து பேசிய அல்லு அர்ஜூன் -அட்லீ கூட்டணி: நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியா மணி உள்ளிட்ட நட்சத்திரங்களின் கூட்டணியில் கடந்த 7ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது ஜவான் படம். இந்தப் படத்தின்மூலம் பாலிவுட்டில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார் அட்லீ. அவருக்கு இந்தப் படம் மிகச்சிறப்பாக கைகொடுத்துள்ளது. படம் தற்போது 900 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், விரைவில் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளது.
ஜவான் படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் நிலையில், படத்தின் இயக்குநர் அட்லீயும் 1000 கோடி ரூபாய் கிளப் இயக்குநர் வரிசையில் இடம்பெறுவார். இவ்வாறு இணையும் முதல் தமிழ்ப்பட இயக்குநர் என்ற பெருமையும் அவருக்கு இதன்மூலம் கிடைக்கும். இந்நிலையில் 4 ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக உழைத்துவந்த அட்லீ, அதன் அறுவடையை தற்போது சிறப்பாக செய்து வருகிறார். அவருக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை ஜவான் படம் கொடுத்துள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து இந்திய அளவில் ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் அட்லீயுடன் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், அடுத்தப்படத்திற்காக அட்லீக்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அவருடன் கைகோர்க்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, தன்னுடைய அடுத்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜூனுடன் அட்லி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மும்பையில் இவர்கள் இருவரும் சந்தித்துள்ளதாகவும் ஜவான் படத்தின் வெற்றிக்கு அல்லு அர்ஜூன் அட்லிக்கு பாராட்டு தெரிவித்ததாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பில் அல்லு அர்ஜூனுடன் அட்லீ கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்தக் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் பிரபலமடைந்துள்ள அட்லீ, பான் இந்தியா ஸ்டாராக வலம் வரும் அல்லு அர்ஜூனுடன் இணையவுள்ளது இந்திய அளவில் மிகச்சிறப்பாக பார்க்கப்படுகிறது.
தற்போது புஷ்பா 2 படத்தில் சுகுமாரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜூன். இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. சமீபத்தில் அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருதையும் இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இந்திய அளவில் மாஸ் காட்டியுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அட்லீயுடன் அல்லு அர்ஜூன் இணையவுள்ளது அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











