ஜவான் படத்தில் நடிக்க மறுத்த புஷ்பா பட நாயகன்.. காரணத்த தெரிஞ்சுக்கலாங்களா?

மும்பை : நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகி வருகிறது ஜவான் படம்.

இயக்குநர் அட்லீ இந்தப் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின்மூலம் நடிகை நயன்தாராவும் பாலிவுட்டில் தன்னுடைய அறிமுகத்தை கொடுக்கவுள்ளார்.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் ஜவான். தமிழில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்த விஜய் படங்களை வெற்றிப் படங்களாக்கிய இயக்குநர் அட்லீக்கு அந்தப் படங்களின் வெற்றி தேடிக்கொடுத்த வாய்ப்பு தான் ஜவான்.

சூப்பர் ஹிட்டடித்த பதான் படம்

சூப்பர் ஹிட்டடித்த பதான் படம்

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே துவங்கிய நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 4 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் ஷாருக்கின் படங்கள் எதுவும் ரிலீசாகாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பதான் படம் ரிலீசாகி 1000 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டியுள்ளது.

இறுதிக்கட்டத்தில் ஜவான் படம்

இறுதிக்கட்டத்தில் ஜவான் படம்

இந்நிலையில் அட்லீ -ஷாருக்கான் காம்போவில் உருவாகிவரும் ஜவான் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. விரைவில் சூட்டிங் முடித்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இந்தப் படம் துவக்கவுள்ளது. வரும் ஜூன் மாதத்தில் படம் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா பாலிவுட் என்ட்ரி

நயன்தாரா பாலிவுட் என்ட்ரி

இந்தப் படத்தின்மூலம் நடிகை நயன்தாரா முதல் முறையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், அவரது திருமணத்திலும் ஷாருக்கான் கலந்துக் கொண்டார். தொடர்ந்து சென்னை வந்த அவர் நயன்தாரா வீட்டிற்கு சென்ற ஸ்வீட் சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.

நயன்தாராவை பாராட்டிய ஷாருக்

நயன்தாராவை பாராட்டிய ஷாருக்

பதான் படத்தின் சக்சஸையொட்டி ரசிகர்களிடம் ட்விட்டர் மூலம் பேசிய ஷாருக்கான், நயன்தாரா குறித்து பேசுகையின் நயன்தாரா மிகவும் இனிமையானவர் என்றம் அவருக்கு அதிகமான மொழிகள் தெரிவதாகவும் குறிப்பிட்டார். அவருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் ஜவான் படத்தில் அவரது நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.

அல்லு அர்ஜுனை அணுகிய படக்குழு

அல்லு அர்ஜுனை அணுகிய படக்குழு

ஜவான் படத்தில் நடிகர் விஜய் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக தெலுங்குப்பட ஹீரோ அல்லு அர்ஜுனும் படத்தில் கேமியோ ரோலில் நடிப்பதற்காக அணுகப்பட்டுள்ளார். கதையை கேட்ட அவர், அந்த கேரக்டரில் நடிக்க மறுத்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்

நடிக்க மறுத்த அல்லு அர்ஜுன்

தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதனால் ஜவான் படத்திற்கு அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தக் கேரக்டரில் அடுத்ததாக யார் நடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X