கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகர்.. முதல் வேலையாக ஊழியர்களுக்கு தடுப்பூசி.. நெகிழும் டோலிவுட்!
சென்னை: கொரோனாவில் இருந்து மீண்ட பிரபல நடிகர் முதல் வேலையாக தனது ஊழியர்கள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் அல்லு அர்ஜூன்.

கொரோனா நெகட்டிவ்
இந்நிலையில் கொரோனாவில் இருந்து தற்போது மீண்டுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். 15 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு தனக்கு கொரோனா நெகட்டிவ் ஆகியுள்ளதாக கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் அல்லு அர்ஜூன்.

முதல் வேலையாக
தொடர்ந்து தனது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய வீடியோக்களையும் ஷேர் செய்திருந்தார் அல்லு அர்ஜூன். இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட நடிகர் அல்லு அர்ஜூன் முதல் வேலையாக தனது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு தடுப்பூசி
அல்லு அர்ஜூன் அடிக்கடி தொடர்பில் இருக்கும் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார். ஹைத்ராபாத்தில் தனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என அல்லு அர்ஜூன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

பலரும் வரவேற்பு
நடிகர் அல்லு அர்ஜூனின் இந்த முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடிகர் அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











