Allu arjun: மல்லு அர்ஜுனாக மாறிய புஷ்பா பட நாயகன்.. வெறித்தனமாக வரவேற்பு கொடுத்த மல்லுவுட் ரசிகர்கள்
கொச்சி: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில், ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் வரும் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஐதராபாத், சென்னை, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், இன்றைய தினம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி கேரள மாநிலம் கொச்சியில் நடக்கவுள்ளது. இதற்காக விமானம் மூலம் கொச்சி சென்ற அல்லு அர்ஜுனுக்கு கேரள ரசிகர்கள் வெறித்தனமாக வரவேற்பை கொடுத்தனர்.

வெறித்தனமான வரவேற்பு: இதையொட்டி நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்தில் சென்றிறங்கினர். அங்கு அல்லு அர்ஜுனுக்கு மிகவும் வெறித்தனமாக மற்றும் சிறப்பான வரவேற்பை கேரள ரசிகர்கள் கொடுத்ததை பார்க்க முடிந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கொச்சி விமான நிலையத்தின் வாயிலில் கூடியிருந்த நிலையில் அனைவரும் அல்லு அர்ஜுனுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தனர். புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். முன்னதாக பாட்னா மற்றும் சென்னையிலும் அல்லு அர்ஜுனுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி வரவேற்பு கொடுத்த நிலையில் அவர் தற்போது கேரளாவிலும் அதே வரவேற்பை பெற்றுள்ளார்.
பான் இந்தியா நாயகன்: புஷ்பா உள்ளிட்ட படங்களின் மூலம் அல்லு அர்ஜுன் பான் இந்தியா நடிகராக மாறியுள்ளார். இதனால் அவர் செல்லும் இடமெங்கும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் தொடர்ந்து சிறப்பான வரவேற்பை கொடுத்து வருகின்றனர். வரும் 5ம் தேதி சர்வதேச அளவில் புஷ்பா 2 படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் இந்த படம் முதல் பாகத்தை காட்டிலும் மிகச் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
1000 கோடி வசூலிக்குமா புஷ்பா 2?: புஷ்பா படம் 500 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் வசூலித்திருந்தது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள புஷ்பா 2 படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை பார்க்கும்போது படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி வைல்ட்ஃபயர் நிகழ்ச்சியாக களைகட்டியது. நிகழ்ச்சியில் பேசிய அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, ஸ்ரீலீலா உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











