Allu arjun: ராஷ்மிகா மந்தனா இல்லாம இது சாத்தியமே இல்ல.. உருகிய அல்லு அர்ஜுன்!

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா 2 படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. படத்தின் டிக்கெட்டுகளை புக் செய்ய சர்வதேச அளவில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்,

முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் வெளியானபுஷ்பா படத்தின் வசூல் 500 கோடி ரூபாய்களை தாண்டிய நிலையில், புஷ்பா 2 படத்தின் வசூல் ஆயிரம் கோடிகளை தாண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். அதற்கேற்ப படத்தின் புக்கிங்குகள் துவங்கியுள்ள நிலையில் சர்வதேச அளவில் படத்தின் புக்கிங்குகள் சிறப்பாக அமைந்து வருகின்றன.

allu arjun pushpa 2 movie rashmika mandanna

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணியில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் இம்மாதம் 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தியில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை ஹைதராபாத், சென்னை, பாட்னா, மும்பை, கொச்சி ஆகிய இடங்களில் படக்குழுவினர் மேற்கொண்டனர். படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வுகள் இந்த இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் செல்லும் இடங்களில் எல்லாம் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா ஜோடியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

ரசிகர்களை கவர்ந்த ஜோடி: அதேபோல செல்லும் இடங்களில் எல்லாம் இவர்கள் மேடையில் ஏறி ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அடுத்தடுத்த ரசிகர்களுடன் உரையாடினர். மேலும் மேடையில் இவர்கள் இருவரும் போட்ட ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. அடுத்தடுத்து பிரமோஷன்களால் படத்திற்கான எதிர்பார்ப்பை படக்குழுவினர் எகிற செய்துள்ளனர். முன்னதாக ட்ரெயிலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் நேற்றைய தினம் வெளியான பீலிங்ஸ் பாடலும் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்துள்ளது. இதில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.

ஸ்ரீவள்ளியால்தான் சாத்தியம்: முன்னதாக சாமி பாடலும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்து அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுகுமார் உள்ளிட்டவர்களும் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ராஷ்மிகா மந்தனாவின் ஆதரவு மிகப்பெரியது என்று நடிகர் அல்லு அர்ஜுன் தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ஸ்ரீவள்ளியின் ஆதரவு இல்லாமல் புஷ்பா படம் முழுமையடைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு தினமும் நடக்கும் என்றும் ராஷ்மிகா எப்போதாவதுதான் வருவார் என்றும் தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், அவ்வாறு அவர் வரும் நாட்கள் இனிமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் மகிழ்ச்சி: இதேபோல நடிகர் பகத் ஃபாசில் மிகவும் அற்புதமான நடிகர் என்றும் அவரது மாசான நடிப்பை இன்னும் இரு தினங்களில் ரசிகர்கள் உணர முடியும் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் சிவப்பு சந்தன மர கடத்தல் செய்பவராக இந்த படத்தின் முதல் பாகத்தில் காணப்பட்ட நிலையில் இரண்டாவது பாகத்தில் அவர் கேங்ஸ்டராக மாறுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுனின் மனைவியாக ராஷ்மிகா மந்தனாவும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X