Allu Arjun Net Worth: சம்பளம் முதல் வீடு வரை எல்லாமே 100 கோடிதான்! அல்லு அர்ஜுன் கார் விலை தெரியுமா?
ஹைதராபாத்: டோலிவுட்டின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இன்று பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கலக்கி வருகிறார் அல்லு அர்ஜுன்.

புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பின்னர் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்ட அல்லு அர்ஜுனுக்கு பல கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளன.
அல்லு அர்ஜுனின் சம்பளம், வீட்டு மதிப்பு, கார்களின் லிஸ்ட் போன்றவைகளை இப்போது பார்க்கலாம்.

Allu Arjun Birthday: 1985ம் ஆண்டு வெளியான விஜேதா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அல்லு அர்ஜுன். அவரது தாத்தா அல்லு ராமலிங்கையா தெலுங்கு திரையுலகில் காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர். அதேபோல், அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் பிரபல சினிமா தயாரிப்பாளராக வலம் வருகிறார். பாரம்பரியமான திரையுலக குடும்பப் பின்னணியில் இருந்து அறிமுகமான அல்லு அர்ஜுன், தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார்.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் இன்று தனது 41 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குழந்தை நட்சத்திரம் உட்பட மொத்தமே 20 படங்களில் மட்டுமே நடித்துள்ள அல்லு அர்ஜுன், தற்போது புஷ்பா 2 படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். இதனைத் தொடர்ந்து முதன்முறையாக பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். பூஷன் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இதில் நடிக்க 125 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல், விளம்பரத்தில் நடிக்க 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பின்னர் அதிகமான விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். அதுமட்டும் இல்லாமல் ஹைதராபாத்தில் சொந்தமாக நைட் கிளப் நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், ஐதராபாத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் அல்லு அர்ஜுனின் வீட்டின் மதிப்பு 100 கோடி இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. நீச்சல் குளம், மினி ஹோம் தியேட்டர், ஜிம், மினி பார் என சகல வசதிகளுடன் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளதாம் இந்த வீடு.
ஹைதராபாத்தில் உள்ள சொந்த வீடு தவிர, விசாகப்பட்டினம், சென்னை போன்ற இடங்களிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் அல்லு அர்ஜுன். மேலும் சொந்தமாக ஓடிடி தளம் வைத்திருக்கும் நடிகரும் இவராக தான் இருப்பார். தமிழ், தெலுங்கு படங்கள், வெப் சீரிஸ்களை ஸ்ட்ரீமிங் செய்து வரும் ஆஹா ஓடிடி அல்லு அர்ஜுனுடையது தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட அல்லு அர்ஜுன், 1.2 கோடி மதிப்புள்ள ஜாகுவார் XJL, 86 லட்சம் மதிப்புள்ள ஆடி A7, 80 லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ X5 ஆகிய சொகுசு கார்களை தனது வீட்டில் நிறுத்தியுள்ளாராம்.
முக்கியமாக அதிநவீன வசதிகளுடன் கூடிய வேனிட்டி வேன் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அல்லு அர்ஜுன். நகரும் வீடு போல அனைத்து வசதிகளையும் கொண்ட இந்த வேனின் மதிப்பு மட்டும் 7 கோடி ரூபாயாம். 2011-ம் ஆண்டு சினேகா ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்ட அல்லு அர்ஜுனுக்கு, அல்லு அயன் என்கிற மகனும், அல்லு அர்ஹா என்கிற மகளும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











