Allu arjun: பாலிவுட் படங்களில் நடிக்க மாட்டேன்.. மும்பை பிரமோஷனில் கெத்து காட்டிய அல்லு அர்ஜுன்!
மும்பை: நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள புஷ்பா தி ரூல் படம் வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அடுத்தடுத்த இடங்களில் படக்குழுவினர் முகாமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் மும்பையில் பிரமோஷன்களுக்காக செய்தியாளர்களிடம் அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்கள் பேசினர். அப்போது பாலிவுட் படங்களில் நேரடியாக நடிப்பது குறித்து அல்லு அர்ஜுன் பேசியுள்ளார். அவரது நடிப்பில் புஷ்பா உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டில் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் அவர் பாலிவுட் என்ட்ரி குறித்து பேசியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா தி ரூல் படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்ற நிலையில் படத்தின் 2வது பாகத்தை அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணி சிறப்பாக மேற்கொண்டுள்ளது. முதல் பாகத்தை காட்டிலும் அதிகமான பொருட்செலவில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பாடல்கள் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.
இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்: இந்நிலையில் படத்தின் பிஜிஎம்மும் ரசிகர்களை அதிகமாக கவரும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதை படத்தின் ட்ரெயிலரிலும் பார்க்க முடிந்தது. படத்தின் பாடல்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு கொடுத்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, ஐதராபாத், பாட்னா, கொச்சி ஆகிய இடங்களில் படத்தின் ப்ரோமோஷன்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று மாலை மும்பையில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலக்கலான கெட்டப்பில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் பங்கேற்று மேடையில் சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டதை ரசிகர்கள் மிகச் சிறப்பாக என்ஜாய் செய்து ஆரவாரம் செய்தனர்.,
பாலிவுட்டில் நோ என்ட்ரி: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அல்லு அர்ஜுன், படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் குறித்து பேசியிருந்தார். முன்னதாக தேவிஸ்ரீ பிரசாத் பாலிவுட்டில் ஏன் இசையமைப்பதில்லை என்று கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு அவர் தான் பாலிவுட் படத்தில் நடித்தால் அவரும் அந்த படத்திற்கு இசையமைப்பேன் என்று கூறியதாகவும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஆனால் தான் பாலிவுட் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று கூறியதாகவும் அந்த நேரத்தில் பாலிவுட்டில் என்ட்ரி கொடுப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அல்லு அர்ஜுன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியில் நேரடி படம்?: பாலிவுட் படங்களில் தான் நடிக்கப் போவதில்லை என்று தான் முன்னதாக கூறியதை மும்பையில் சென்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார் அல்லு அர்ஜுன். இது அவரது ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. முன்னதாக புஷ்பா படம் வெளியான நிலையில் அந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்களும் கொண்டாடினர். தற்போது பாலிவுட்டில் அல்லு அர்ஜுனுக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படும் நிலையில் விரைவில் அங்கேயும் நேரடி இந்திப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











