Allu Arjun: அல்லு அர்ஜுனை பயமுறுத்திய புஷ்பா 2 படம்.. அட இப்படி ஒரு காரணம் இருக்கா?

சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து ஏராளமான ரசிகர்களின் சொந்தக்காரராக உள்ளார். அவரது நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ள நிலையில் இந்தப் படத்தின் மூன்றாவது பாகமும் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசியில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 1800 கோடி ரூபாய்களை சர்வதேச பாக்ஸ் ஆபீசில் வசூலித்தது. சுகுமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் முதல் பாகமும் சிறப்பான வகையில் அமைந்திருந்த நிலையில் இரண்டாவது பாகத்தை மேலும் பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவுடன் தயாரிப்பு தரப்பு உருவாக்கியிருந்தது.

Allu Arjun Pushpa 2 movie Sukumar

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறப்பான இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவரது கேரியர் பெஸ்ட்டாக பல படங்கள் உள்ள நிலையில் அடுத்தடுத்து சுகுமார் இயக்கத்தில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 அவற்றில் டாப்பில் உள்ளது. இதில் புஷ்பா படம் 500 கோடிகளை தாண்டி வசூலித்த நிலையில் புஷ்பா 2 படம் 1,800 கோடிகளை வசூலித்ததாக கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசின்போது கூட்ட நெரிசலில் அல்லு அர்ஜுனின் ரசிகை ஒருவர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியது.

அதிரடி கிளப்பிய புஷ்பா 2 படம்: இதன் காரணமாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது. படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் மிகச் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் புஷ்பா படத்தின் மூன்றாவது பாகம் விரைவில் உருவாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக இயக்குநர் அட்லியுடன் இணைந்து அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் புஷ்பா 2 படம் குறித்து முன்னதாக பேசியுள்ள நடிகர் அல்லு அர்ஜுன், இந்த படத்தின் ஒரு காட்சி தனக்கு மிகப்பெரிய அளவில் அச்சத்தையும் பதற்றத்தையும் கொடுத்ததாக கூறியுள்ளார். படத்தில் அதிகமான வரவேற்பை பெற்ற ஜாதரா காட்சி தான் அது.

அல்லு அர்ஜுனை பயமுறுத்திய புஷ்பா 2 படம்: இந்த காட்சியில் தான் பெண் வேடம் அணிய வேண்டும் என்றும் பெண்ணாகவே மாறி சில விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் சுகுமார் கூறியதை கேட்டு தான் முதலில் பதற்றம் அடைந்ததாகவும் ஆனால் தொடர்ந்து தைரியத்தை வரவழைத்து அந்த காட்சியை சிறப்பாக செய்து முடித்ததாகவும் அல்லு அர்ஜுன் மேலும் தெரிவித்துள்ளார். இந்த காட்சி புஷ்பா 2 படத்திற்கு மிகப்பெரிய வைபை கொடுத்திருந்தது. இதில் அல்லு அர்ஜுனனின் நடனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் அதைத்தொடர்ந்து ராஷ்மிகா மற்றும் அல்லு அர்ஜுனின் பாடல் காட்சியும் சிறப்பாக அமைந்திருந்தது.

அல்லு அர்ஜுன் -அட்லி கூட்டணி: மொத்தத்தில் புஷ்பா 2 படம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கியமான காட்சி தனக்கு பதற்றத்தை ஏற்படுத்தியதாக அல்லு அர்ஜுன் கூறியுள்ளது கவனத்தை பெற்றுள்ளது. தற்போது இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள நிலையில் புஷ்பாட்டு படம் குறித்து 3 படம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே அட்லியுடன் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக கூறப்படும் படம் மிகவும் பிரம்மாண்டமாக பான் இந்தியா படமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ஜான்வி கபூர் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X