அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 : தி ரூல் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூப்பர் டேட்தான்!

ஐதராபாத்: நடிகர் அல்லு அர்ஜுன் -இயக்குனர் சுகுமார் கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் ஜரூராக உருவாகி வருகிறது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் படம் சுதந்திர தினக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தில் சில காட்சிகளின் படப்பிடிப்பு எடுத்து முடிக்கப்பட வேண்டியிருந்ததால் தற்போது படம் வரும் டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். முன்னதாக படத்தின் டீசர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டிய சூழலில் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

Allu Arjun Sukumar Rashmika mandanna

நடிகர் அல்லு அர்ஜுன்: நடிகர் அல்லு அர்ஜுன். ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் புஷ்பா 2. சுகுமார் இயக்கத்தில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் 2வது பாகத்தை இயக்கும் வேலைகளை தயாரிப்பு நிறுவனம் மேற்கொண்டது. இந்த படத்தின் அடுத்தடுத்த கட்ட ஷூட்டிங்குகள் நடந்து வந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தில் பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் சூழலில் படத்தின் முதல் பாகம் போலவே இந்த படத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசை: முதல் பாகத்தில் படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்நிலையில் தற்போது இரண்டாவது பாகத்தின் பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் இன்னும் சில காட்சிகள் சூட்டிங் பாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் தற்போது டிசம்பர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது. படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். டிசம்பர் மாதம் 6ம் தேதி படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா ஜோடி: படத்தின் முதல் பாகத்தில் சிவப்பு சந்தன மரக்கடத்தலை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக அல்லு அர்ஜுன் மாஸ் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள், பாடல், டீசர் உள்ளிட்டவை வெளியான நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் மனைவியான ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இந்த பக்கத்திலும் அதை தொடர்வதாக காணப்படும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

பான் இந்தியா படம்: படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்களுக்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதியில் தங்கலான், அமரன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், புஷ்பா 2 படத்துடன் இந்தப் படங்கள் மோதும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளிப் போயுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X