புஷ்பா 2 படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அல்லு அர்ஜுன்.. ரசிகர்களை கவர்ந்த புதிய லுக்!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது புஷ்பா 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக பான் இந்தியா படமாக வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை அல்லு அர்ஜுனுக்கு பெற்றுத் தந்தது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படத்தின் பாடல்களும் மிக சிறந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. குறிப்பாக சமந்தா குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

புஷ்பா படம்

புஷ்பா படம்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பான் இந்தியா படமாக வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்த படம் புஷ்பா. சிவப்பு சந்தன மரக் கடத்தலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது புஷ்பா படம். சாக்லேட் பாய் லுக்கில் ரசிகர்களை கவரும் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் நடித்திருந்தார்.

 சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்


ராஷ்மிகாவும் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து பட்டையை கிளப்பியிருந்தார். இவரது நடிப்பில் சாமி பாடல் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றது. இதேபோல சமந்தா குத்தாட்டம் போட்டிருந்த ஊ சொல்றியா மாமா பாடலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் சிறப்பாக அமைந்திருந்தது. இதுவும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

புஷ்பா 2 படத்தின் சூட்டிங் விறுவிறு

புஷ்பா 2 படத்தின் சூட்டிங் விறுவிறு

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தின் சூப்பர் வெற்றியை அடுத்து, கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் சுகுமார். படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினம் துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் பெங்களூருவில் நடைபெறவுள்ள சூட்டிங்கில் நடிகை சாய் பல்லவி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறப்பான ஹேர்ஸ்டைல்

சிறப்பான ஹேர்ஸ்டைல்

90களில் நடைபெறும் கதைக்களமாக இந்தப் படம் அமைந்துள்ள நிலையில், அந்த காலத்திய ஃபங்க் ஹேர்ஸ்டைலுடன் அல்லு அர்ஜுன் காணப்படுகிறார். தற்போது இந்த புது ஹேர்ஸ்டைலுடன் அவர் விமானநிலையத்திற்கு வந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் அவர் தனது முடிக்கு தங்க நிறத்தில் ஹேர் கலரிங்கும் செய்துள்ளார். புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனின் லுக் தான் சிறப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் தற்போது புஷ்பா 2 படத்திற்கும் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் அவர் காணப்படுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மிரட்டலான கதைக்களம்

மிரட்டலான கதைக்களம்

இந்த இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் இருவருக்கும் இடையிலான மோதல்தான் படத்தின் மையமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக மற்றொரு வில்லன் கேரக்டருக்காக விஜய் சேதுபதி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் புஷ்பா 2 படத்தில் அவர் இணையவில்லை. இந்நிலையில் மிரட்டலான கதைக்களத்துடன் புஷ்பா 2 படம் ரசிகர்களுக்கு சிறப்பான கொண்டாட்டத்தை கொடுக்கும் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X