அடுத்த வேட்டைக்கு தயாராகும் புஷ்பா 2 டீம்.. கிளிம்ப்ஸ் வெளியானது!

ஐதராபாத் : நடிகர் அல்லு அர்ஷுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சமந்தா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான புஷ்பா படம் சிறப்பான வெற்றியை பெற்றது.

கடந்த டிசம்பரில் வெளியான இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். அல்லு அர்ஜுன் கேரியரில் பெஸ்டாக இந்தப் படம் அமைந்துள்ளது.

இந்த வெற்றிக்கூட்டணியுடன் மீண்டும் களமிறங்கியுள்ளார் படத்தின் இயக்குநர் சுகுமார். படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்

அல்லு அர்ஜுனின் புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியானது புஷ்பா படம். இந்தக் படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டுக்கு அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஆட்டம் போட்டிருந்தார் சமந்தா.

கடத்தலை மையமாக கொண்ட படம்

கடத்தலை மையமாக கொண்ட படம்

சிவப்பு சந்தனமரக் கடத்தலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் மிரட்டியிருந்தார் அல்லு அர்ஜுன். அலா வைகுந்தபுரமுலு என்ற படத்தில் ஸ்டைலிஷ் லுக்கில் ரசிகர்களை கவர்ந்த இவர், புஷ்பா படத்தில் கரடுமுரடான லுக்கில், லாரி டிரைவராக நடித்திருந்தார். இந்தக் கேரக்டர் கேங்ஸ்டராக மாறுவதை கதைகளமாக இந்தப் படம் கொண்டிருந்தது.

புஷ்பா படத்தின் சிறப்பு

புஷ்பா படத்தின் சிறப்பு

படத்தில் அல்லு அர்ஜுன் -பகத் பாசில் காம்பினேஷன் காட்சிகள், அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனா காதல், சமந்தாவின் குத்தாட்டம் போன்றவை சிறப்பை சேர்த்தன. படம் வசூல் வேட்டை நடத்தியது. இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிளிம்ப்ஸ் வெளியிட்ட ராஷ்மிகா

கிளிம்ப்ஸ் வெளியிட்ட ராஷ்மிகா

இதனிடையே இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய உற்சாகத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் இயக்குநர் சுகுமார், ஒளிப்பதிவாளருக்கு காட்சியை விவரிப்பதாக காணப்படுகிறது.

பிரம்மாண்டமாக இயக்க திட்டம்

பிரம்மாண்டமாக இயக்க திட்டம்

முதல் பாகம் சிறப்பான வெற்றியை அடைந்துள்ள நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி படத்தின் கதையிலும் சிலபல மாற்றங்களை செய்துள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியானது.

சமந்தாவிற்கு பதிலாக தமன்னா?

சமந்தாவிற்கு பதிலாக தமன்னா?

இதேபோல முதல் பாகத்தில் ஊ சொல்றிய மாமா என்ற பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்ட சமந்தாவிற்கு பதிலாக இந்தப் படத்தில் தமன்னா நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. சமந்தாவின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்த நிலையில், அதை தற்போது தமன்னா ஈடு செய்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X