15 நாள் குவாரண்டைன் நிறைவு.. மகனையும் மகளையும் அள்ளிக்கொஞ்சிய அல்லு அர்ஜூன்.. நெகிழ வைக்கும் வீடியோ!
சென்னை: 15 நாள் குவாரண்டைனுக்கு பிறகு தனது மகனையும் மகளையும் பார்த்த நடிகர் அல்லு அர்ஜூன் அவர்களை அள்ளி முத்தமிட்டு கொஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜூன். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வந்தார் நடிகர் அல்லு அர்ஜூன்.

கொரோனா நெகட்டிவ்
இந்நிலையில் கொரோனாவில் இருந்து தற்போது மீண்டுள்ளார் நடிகர் அல்லு அர்ஜூன். 15 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு கொரோனா நெகட்டிவ் ஆகியுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் அல்லு அர்ஜூன்.

அல்லு அர்ஜூன் வீடியோ
அதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அல்லு அர்ஜூன் வீடியோ ஒன்றையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
Meeting family after testing negative and 15 days of quarantine. Missed the kids soo much 🖤 pic.twitter.com/ubrBGI2mER
— Allu Arjun (alluarjun) May 12, 2021
குழந்தைகளை அள்ளிக் கொஞ்சி
அதில் வீட்டுக்குள் செல்லும் அல்லு அர்ஜூன், தனது மகனையும் மகளையும் அள்ளிக்கொஞ்சுகிறார். அவர்களை கட்டியணைத்து முத்தமிடுகிறர் அல்லு அர்ஜூன். அதோடு அவர்களை கட்டிபுரண்டும் உருண்டுள்ளார் அல்லு அர்ஜூன்.

குழந்தைகளை மிஸ் பண்ணினேன்
மேலும் அந்த வீடியோவுக்கு கொரோனா நெகட்டிவ் ஆன பிறகு 15 நாட்கள் குவாரண்டைன் முடிந்து குடும்பத்தை சந்திக்கிறேன். குழந்தைகளை ரொம்பவே மிஸ் பண்ணினேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

குவியும் லைக்ஸ்
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், பார்க்கவே நெகிழ்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக கூறி வருகின்றனர். இந்த வீடியோ லைக்ஸ்களையும் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











