Allu arjun: புஷ்பா 2 பட மிரட்டல் வசூல்.. 3 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்.. இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 படம் இன்றைய தினம் 4வது நாளில் வெற்றிகரமாக நடைபோட்டு வருகிறது. அடுத்தடுத்த நாட்களில் சர்வதேச அளவில் இந்தப் படத்தின் கலெக்ஷன்கள் ரசிகர்களையும் திரைத்துறை பிரபலங்களையும் மிரட்டி வருகிறது. அரங்கு கொள்ளாத காட்சிகளாக படம் திரையரங்குகளில் ஓடி வருகிறது.
அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணி எப்போதுமே மிகவும் சிறப்பானது. முன்னதாக ஆர்யா படத்திலேயே இவர்களின் காம்பினேஷன் சிறப்பாக அமைந்த நிலையில், தற்போது புஷ்பா 2 படமும் அந்த வெற்றிப்பட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.முன்னதாக புஷ்பா படமும் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலை சர்வதேச அளவில் பெற்ற நிலையில், புஷ்பா 2 சில தினங்களிலேயே 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் முனைப்பை காட்டி வருகிறது.

புஷ்பா 2 படம்: நடிகர் அல்லு அர்ஜுனின் திரையுலக பயணம் பல ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக அமைந்து வருகிறது. சிறிது சிறிதாக ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய அளவில் மிரட்டலான பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் அல்லு அர்ஜுன். அதற்கு சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளது புஷ்பா 2. இந்த படத்தில் இயக்குநர் சுகுமாருடன் கூட்டணி அமைத்துள்ளார் அல்லு அர்ஜுன். இது அவர்களின் முதல் கூட்டணி இல்லை. தொடர்ந்து ஆர்யா, புஷ்பா என அடுத்தடுத்த படங்களின் மூலம் இந்த கூட்டணி கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது புஷ்பா 2 படத்தின் மூலம் மிகவும் பிரம்மாண்டமான காம்பினேஷனாக இவர்கள் மாறியுள்ளனர்.
3 நாள் அதிகாரப்பூர்வ வசூல்: கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது புஷ்பா 2. இந்த படம் முதல் நாளிலேயே சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 294 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டியதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது நாளில் 449 கோடி ரூபாய் வசூலை எட்டியதாகவும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்திருந்தது, இதனிடையே தற்போது மூன்று நாள் கலெக்சன் ரிப்போர்ட்டையும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது இந்நிலையில் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் புஷ்பா 2 மாஸ் காட்டி வருகிறது. தற்போது கடந்த 3 நாட்களின் சர்வதேச கலெக்ஷன் ரிப்போர்ட்டை மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளது.
ரூ.621 கோடி வசூல்: இந்த படம் கடந்த மூன்று நாட்களில் 621 கோடி ரூபாய் வசூலை சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் எட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்றைய தினமும் வார இறுதி நாள் என்பதால் தொடர்ந்து நான்கு நாட்களிலேயே இந்த படத்தின் வசூல் மிகச் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படம் சில தினங்களிலேயே ஆயிரம் கோடி கிளப்பில் இணையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியிலும் இந்தப் படம் மிகச்சிறப்பாக அமைந்து வருகிறது கடந்த 3 நாட்களிலேயே இந்தப் படம் 200 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளதாகவும் தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
புஷ்பா 3 படம்: புஷ்பா படத்தின் மூன்றாவது பாகமும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் சூட்டிங் சில மாதங்களில் துவங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் இணைவாரா அல்லது மற்ற இயக்குநர்கள் கூட்டணியில் இவரது படம் இருக்குமா என்பது குறித்து விரைவில் அவரது தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். புஷ்பா 2 படத்தின் ப்ரமோஷன்களுக்காக சென்னை, ஐதராபாத், மும்பை, பாட்னா உள்ளிட்ட பல இடங்களில் பங்கேற்று புஷ்பா 2 மூவி டீம் கலக்கியது. சென்னையில் நடந்த இந்த படத்தின் ப்ரோமோஷனில் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.
அல்லு அர்ஜுன் அடுத்தப்படம்?: இந்த நிகழ்வில் நெல்சன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் இணையவுள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த கூட்டணி குறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். புஷ்பா 2 படம் சர்வதேச அளவில் அனைத்து ரசிகர்களையும் கவரும் வகையில் கதைகளத்தை அமைத்து இருந்தது. முன்னதாக புஷ்பா படத்திலிருந்து மாறுபட்டு புஷ்பா 2 படத்தில் இன்டர்நேஷனல் லெவலில் அவரது பயணம் காட்டப்பட்டுள்ளது. இதனிடையே இந்த படத்தின் கிளைமாக்ஸில் மிகப்பெரிய ட்விஸ்டையும் வைத்து சுகுமார் ரசிகர்களை மிரட்டியுள்ளார்.
அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனா ஜோடி?: இதனால் புஷ்பா 3 படம் இன்னும் அதிரடி காட்சிகளுடன் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்திலும் அல்லு அர்ஜுன் -ராஷ்மிகா மந்தனா பயணம் தொடருமா என்பது குறித்தும் விரைவில் தெரியவரும். அதே போல சமந்தா, ஸ்ரீலீலாவை அடுத்து புஷ்பா 3 படத்தில் யாரை சுகுமார் ஆடவிட்டு அழகு பார்ப்பார் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











